பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சபை கூட்டம் இன்று கிடையாது

Added : ஜன 26, 2021
Share
Advertisement
சென்னை : 'கொரோனா தொற்று காரணமாக, கிராம ஊராட்சிகளில், இன்று கிராம சபை கூட்டம் நடக்காது' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடக்கும்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவிப்பர். ஊராட்சி வரவு செலவு கணக்கும்

சென்னை : 'கொரோனா தொற்று காரணமாக, கிராம ஊராட்சிகளில், இன்று கிராம சபை கூட்டம் நடக்காது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடக்கும்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவிப்பர். ஊராட்சி வரவு செலவு கணக்கும் சமர்பிக்கப்படும். மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகளும் தேர்வு செய்யப்படுவர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு, மே தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களில், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை.

இந்நிலையில், குடியரசு தினமான இன்று, கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக, கிராம சபை கூட்டம் நடத்த வேண்டாம் என, ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் பழனிசாமி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி, இன்று கிராம சபை கூட்டம் நடக்காது என, அனைத்து ஊராட்சிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X