சென்னை : ஜெயலலிதா நினைவிடம் நாளையும்; ஜெ., நினைவு இல்லம், நாளை மறுதினமும் திறக்கப்பட உள்ளன.ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில், அவர் வசித்த வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, அவரது இல்லம் அமைந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அதற்கு இழப்பீடாக, 68 கோடி ரூபாய், அரசு சார்பில், நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.ஜெ., வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற, அவரது வீடு முழுதும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. அவர் முக்கிய தலைவர்களுடன் இருக்கும் படங்கள் உட்பட, அனைத்து புகைப்படங்கள்; அவர் பயன்படுத்திய பொருட்கள், பூஜை பொருட்கள் போன்றவை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. சென்னை மெரினா கடற்கரையில், ஜெ., உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை நினைவிடம் திறக்கப்பட உள்ளது.
நாளை மறுதினம், 28ம் தேதி காலை, 10:30 மணிக்கு, ஜெ., நினைவு இல்லத்தை, முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE