இது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல!| Dinamalar

இது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல!

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (192) | |
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எம்.ராஜா, வெள்ளக்கிணறு, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று நினைக்கும் எண்ணற்ற வாக்காளர்களில், நானும்ஒருவன். அதற்கான காரணங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும், கூற விரும்புகிறேன். கடந்த, 2006- - 2011ல் நடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, 16 மணி நேர

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எம்.ராஜா, வெள்ளக்கிணறு, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று நினைக்கும் எண்ணற்ற வாக்காளர்களில், நானும்ஒருவன். அதற்கான காரணங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும், கூற விரும்புகிறேன். கடந்த, 2006- - 2011ல் நடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, 16 மணி நேர மின்சார வெட்டால் பொதுமக்கள், தொழில்துறையினர் பட்ட அவதியை, சொல்லி மாளாது. இப்போது புதிதாக ஓட்டு போடும், 18 வயது நிரம்பிய இளைய சமுதாயத்திற்கு, அன்றைய மின்வெட்டின் பாதிப்பு குறித்து அவ்வளவாக தெரியாது; இது குறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.latest tamil newsநில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து, காவல் நிலையங்களில் அத்துமீறல் என, தி.மு.க.,வினர் போட்ட ஆட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அக்கட்சி, மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், தமிழகம் அவ்வளவு தான். தற்போது ஆட்சியில் இல்லாதபோதே, தி.மு.க.,வினர் செய்யும் அராஜகங்கள் தலைவிரித்தாடும் போது, அதிகாரம் கிடைத்தால், என்ன செய்வர் என்பதை, நினைத்து பார்க்க வேண்டும். தி.மு.க.,வினர், தங்களது ஆக்டோபஸ் கரங்களால், தொழில் துறையை வளைத்து, வேறு யாரும் தொழில் செய்ய விடாமல், அடாவடி செய்த கடந்த காலத்தை, நாம் மறந்து விடக் கூடாது. ஹிந்து விரோத போக்கில், தி.மு.க., தீவிரமானது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும், ஹிந்து மதத்தை அழிக்க, எத்தனை வழியுண்டோ, அத்தனையையும் நடைமுறைப்படுத்தும் என்பதை யாரும் மறுக்க முடியாது.


latest tamil newsஅநாகரிகமாக பேசுவதிலும், வன்முறையை துாண்டுவதிலும், தி.மு.க.,வை யாரும் மிஞ்ச முடியாது. கடந்த, 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாததால், தி.மு.க.,வினர் அதிகார பசியோடு உள்ளனர். ஆட்சி, அவர்களின் கையில் கிடைத்தால், தமிழகம் நிர்மூலமாகி விடும். அ.தி.மு.க.,ஆட்சியில், சில குறைகள் இருக்கலாம். ஆனால், தி.மு.க., போல தீய கட்சியாக, அ.தி.மு.க.,என்றுமே இருந்தது கிடையாது. முதல்வர் இ.பி.எஸ்., கடும் நெருக்கடியான சூழ்நிலையிலும், சிறப்பாகவே ஆட்சி செய்து வருகிறார்; மிகவும் எளிமையான மனிதராக, அவர் விளங்குகிறார். கொரோனா காலத்தில், அ.தி.மு.க., அரசு மிக சிறப்பாகவே செயல்படுகிறது.

தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு நன்றாகவே உள்ளது. மத துவேஷம் இல்லாத கட்சி, அ.தி.மு.க., என்று உறுதியாக கூறலாம். மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தில் வளர்ச்சி பணிகள் மிகுந்தஅளவில் நடைபெற்று வருவதை, யாரும் மறுக்க முடியாது. தி.மு.க.,வை மீண்டும் அரியணைஏறவிடாமல் செய்ய வேண்டியது, தமிழக மக்களின் கடமை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X