பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி ; வெங்காய விலை மீண்டும் உயர்வு

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், வெங்காய விலை மீண்டும் மார்க்கெட்டில் அதிகரித்து வருகிறது.மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்தாண்டு பெய்த மழையால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, வெங்காய

சென்னை : ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், வெங்காய விலை மீண்டும் மார்க்கெட்டில் அதிகரித்து வருகிறது.



latest tamil news


மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்தாண்டு பெய்த மழையால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, வெங்காய விலை கிடுகிடுவென, கிலோ, 120 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. வெங்காய இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து, வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு, கிலோ, 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. கூட்டுறவு மற்றும் தோட்டக்கலைத் துறை வாயிலாக, மானிய விலையில், சென்னையில், 50 ரூபாய்க்கு வெங்காய விற்பனை நடந்தது. இந்நிலையில், வெங்காய அறுவடை, 2020 நவ., முதல் துவங்கி, நடந்து வருகிறது. இதனால், டிசம்பரில், 1 கிலோ பெரிய வெங்காயம், 25 முதல், 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


latest tamil news



கிடங்குகளில் இருந்து, மீண்டும் அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேஷியாவிற்கும், வெங்காய ஏற்றுமதி துவங்கி உள்ளது. இதன் காரணமாக, வெங்காய விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.தற்போது, சென்னை உட்பட தமிழகம் முழுதும், 1 கிலோ வெங்காயம், 40 முதல், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை இன்னும் உயரக்கூடும் என்கின்றனர் வியாபாரிகள். மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்காத நிலையில், எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது என, பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய - மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
26-ஜன-202112:42:43 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ அரபு பெட்ரோல் 100 வாங்கும் நீ நம்விவசாயி லாபம் அடையப்போகும் வெங்காயம் விலைஏறினால் வாங்கவேண்டியதுதானே ஏன் நம் விவசாயி நன்மையடைவதை குய்யோ முய்யோனு கத்தி தடுக்கிற, என்ன விவசாயிக்கு லாபம் இல்லியா? சரி லாபம் யாருக்குபோவுது? கமிசன் மண்டிகள் அதன் ஏஜண்டுகளுக்கா? சரி அதுதான் அவங்களை பைப்பாஸ் பண்ணி விவசாயிகள் நேரடியா வித்துக்லாம் வெளிநாட்டு ஏற்றுமதி கூட நேரடியா செஞ்சுகலாம்னு சட்டம் வந்துதே? ஓ அதைத்தான் நீங்க எதுத்து தடை பண்ண வச்சிட்டீங்களோ? வெங்காய ஏற்றுமதியாளர் மகாராசுட்ராவின் சரத்பவார் ஏற்றுமதிக்கு மத்தியஅரசு உடனடி அனுமதி கொடுத்தாகவேண்டும்னு 4மாசமா கூப்பாடுபோட்டு இப்ப தன் பெண் கம்பெனிக்கு ஏற்றுமதி அனுமதி வாங்கிட்டாரே, அவருகிட்ட கேட்டுபாப்போமா இந்த வெங்கய விலை உயர்வப்பத்தி? அவரு மோடிதான் காரணமுனு உடனே சொல்லிருவாரு. இப்ப 5மானில எலக்சன் வேற வருதே? மோடி அவர்களே உடனடியாக எகிப்து வெஙகாயத்தை 10 கப்பல் வரவச்சிருங்க, இல்லாட்டி வெங்காயம் வெல ஏத்த மத்திய அரசு யோசிக்குது அப்படின்னு ஒரு சேனல்ல கொளுத்திப்போட்டான்னா கூட போதும் இந்தியா உலகம் பூரா ட்ரெண்டிங் ஆக்கி உங்களுக்கு ஆப்பு வச்சிருவானுக, அடுத்தநாளே வெங்காயம் பாதியா குறைஞ்சா கூட அதைச் சொல்லமாட்டானுக ஒரு 10 நாளைக்கு எல்லா காதும் செவுடாறாமாரி கூவிகினே இருப்பானுவ,
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
26-ஜன-202109:55:44 IST Report Abuse
Nallavan Nallavan விலை உயர்வால் சராசரி இந்தியனுக்கு பாதிப்புதான் ....... ஆனால் ஏற்றுமதி அதிகரித்தால் நமது விவசாயிகளுக்கு நன்மையே ......... நமக்கு எஞ்சியது போக மீதத்தைத்தான் ஏற்றுமதி செய்யவேண்டும் என்கிற வாதம் நகைப்புக்குரியது .......... ஏற்றுமதிக்குத் தகுந்தவாறு, உள்ளூர்த் தேவையையை நிறைவு செய்ய விளைச்சலைக் கூட்டுவது ஒன்றே நிரந்தரத் தீர்வு ..........
Rate this:
Cancel
Kumar - தேனி,இந்தியா
26-ஜன-202109:17:30 IST Report Abuse
Kumar உண்மையில் வெங்காயம் விலை ஏறினால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி, எந்த அரசியல்வாதியாவது விலை குறைந்தால் போராடுகிறானா அப்ப விவசாயி வயித்துல அடிக்கலாம், ஏன்டா தங்கம் விலை கூடும்போது போராட்டம் செய்கிறீர்களா, போங்கடா விவசாயப்பொருட்கள் விலை கூடினால் விவசாயிக்கு மகிழ்ச்சி தான்டா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X