இன்றைய க்ரைம் ரவுண்ட் அப்

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | |
Advertisement
தமிழக நிகழ்வுகள்:-1. 'செக்' மோசடி: 10 மாதங்கள் சிறைதேனி : 'செக்' மோசடி வழக்கில் வணிக வரித் துறை அலுவலக ஊழியருக்கு, 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.2. நெய் வியாபாரி வீட்டில் 100 பவுன் கொள்ளைகோவை:போதிய ஆதாரங்கள் கிடைக்காததால், 100 பவுன் திருடிய கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோவை டாடாபாத் ராஜேந்திரபிரசாத் வீதியை சேர்ந்தவர்

தமிழக நிகழ்வுகள்:-
1. 'செக்' மோசடி: 10 மாதங்கள் சிறை
தேனி : 'செக்' மோசடி வழக்கில் வணிக வரித் துறை அலுவலக ஊழியருக்கு, 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.latest tamil news2. நெய் வியாபாரி வீட்டில் 100 பவுன் கொள்ளை
கோவை:போதிய ஆதாரங்கள் கிடைக்காததால், 100 பவுன் திருடிய கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோவை டாடாபாத் ராஜேந்திரபிரசாத் வீதியை சேர்ந்தவர் கார்த்திக், 42; நெய் மொத்த வியாபாரி. கடந்த, 17ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு சென்றார்.அவர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த, 100 பவுன் நகையை திருடிச் சென்றனர்.


latest tamil news3. கோடிக்கணக்கில் மணல் கடத்தல் ; தலைமறைவானவர் சென்னையில் கைது
திருநெல்வேலி : கேரளாவை சேர்ந்தவர் மனுவேல்ஜார்ஜ். இவர் நிலத்தில் மணல் தோண்டி லாரிகளில் கடத்தப்பட்டது. பல கோடி ரூபாய்க்கு கடத்தப்பட்ட மணல் கனிமவளம், போலீஸ், வருவாய்த்துறையினருக்கு தெரிந்தே நடப்பதாக புகார்கள் எழுந்தன. ரூ.9.56 கோடி அபராதம் விதித்தார். 9 பேர் கைது செய்யப்பட்டு 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.இந்த மணல் கடத்தலுக்கு மூளையாக இருந்த சமீர் 37, சென்னை நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


latest tamil news4. அருப்புக்கோட்டையில் 70 பவுன், ரூ.1.45 லட்சம் கொள்ளை
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மதுரை ரோடு நெசவாளர் காலனி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் நாகநாதன் 45. டூவீலர் விற்பனை தொழில் செய்கிறார். நேற்று காலை குடும்பத்துடன் திருமணத்துக்கு சென்றார். மதியம் 2:00 மணிக்கு திரும்பியபோது வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. பீரோவை உடைத்து 70 பவுன், ரூ.1.45 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news5. டூவீலர்களை மறிக்கும் குடிமகன்கள்; அப்பாவி தொழிலாளர்கள் சிரமம்
திருப்புவனம்: திருப்புவனம் பைபாஸ் ரோட்டில் செல்லும் டூவீலர்களை குடிமகன்கள் வழிமறித்து தினசரி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

6. பழநியில் ஒரு டன் அல்வா பறிமுதல்
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது. சோதனையில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள், ஒரு டன் தரம் குறைந்த அல்வா, 2 டன் பேரீச்சம் பழம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 20 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமீறல் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டனர்.

இந்தியாவில் குற்றம்:-
மூடநம்பிக்கையால் மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்
திருப்பதி : ஆந்திராவில், மூட நம்பிக்கை காரணமாக, நன்கு படித்த பெற்றோரே, தங்களின் இரு மகள்களை நரபலி கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது. மகள்கள் மீண்டும் உயிர்த்தெழுவர் என்ற நம்பிக்கையில், அவர்களை கொலை செய்ததாக, அந்த முட்டாள் பெற்றோர், வாக்குமூலம் அளித்துள்ளனர்.


latest tamil newsஉலக நடப்பு:-
டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல்
வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் மீதான விசாரணை, விரைவில் நடக்க உள்ள நிலையில், பல, எம்.பி.,க்களுக்கு மிரட்டல்கள் வருவது, பாதுகாப்பு அமைப்புகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X