பொது செய்தி

தமிழ்நாடு

இது தானா சார் உங்க 'டக்கு!' மேம்பாலம் கட்டும் பணியில் ஆமை வேகம்:போக்குவரத்து மாற்றம் செய்தும் பயனில்லை

Added : ஜன 26, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில், மேம்பாலம் கட்டுவதற்காக, வாகன போக்குவரத்து வேறு வழித்தடத்தில் மாற்றி விடப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வரும் சூழலில், மேம்பாலம் கட்டும் பணி, சுறுசுறுப்பின்றி, ஆமை வேகத்தில் நடப்பது, பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல்

பெ.நா.பாளையம்:கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில், மேம்பாலம் கட்டுவதற்காக, வாகன போக்குவரத்து வேறு வழித்தடத்தில் மாற்றி விடப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வரும் சூழலில், மேம்பாலம் கட்டும் பணி, சுறுசுறுப்பின்றி, ஆமை வேகத்தில் நடப்பது, பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி திருமண மண்டபம் வரை, 1.20 கி. மீ., நீளத்தில், 66 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டுமானப் பணியும், மற்றும் ஜி.என்.மில் சந்திப்பில், 41 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பால கட்டுமான பணியும், 2019 மார்ச் மாதம் தொடங்கியது.பாலம் கட்டுமான பணிக்காக கடந்த, 8ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதன்படி, மேட்டுப்பாளையம் ரோட்டில் பஸ்கள், கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இதனால் வெள்ளக்கிணர் பிரிவு, துடியலூர் கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 'எப்படியோ, பாலம் சீக்கிரம் கட்டி முடிக்கட்டும்' என்று, பொதுமக்களும், அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.ஆனால், போக்குவரத்து வேறு வழித்தடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், பாலம் கட்டும் பணி, ஆமை வேகத்திலேயே நடக்கிறது. பெயரளவுக்கு ஒன்றிரண்டு பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். இதைக்கண்டு, வழித்தட மாற்றத்தை, வேதனையுடன் ஏற்றுக்கொண்ட அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மாற்றுப்பாதையில் பயணம் செய்து வரும் வாகன ஓட்டிகள் கூறுகையில், 'தற்போது கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் ரோட்டில் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதிலும், சில இடங்களில் தடுப்பு வைக்கப்பட்டு, எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.'போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால், மேம்பால பணிகள் அசுர கதியில் நடக்கும் நடக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், மந்தகதியில் நடக்கிறது' என்று புகார் கூறினர்.தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பின் பணிகள் வேகமாக நடக்கின்றன. திட்டமிட்டபடி பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X