பொது செய்தி

இந்தியா

பழைய ரூ.100 மாற்றமா? ரிசர்வ் வங்கி விளக்கம்

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
மும்பை : 'பழைய 5,10 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற உள்ளதாக வெளியான தகவல் தவறு' என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.சமீபத்தில் சமூக ஊடகங்களில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக தகவல் வெளியானது. 'மார்ச் 21க்குள் பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் அவற்றை மாற்ற
RBI,Reserve Bank,100rs,ரிசர்வ் வங்கி

மும்பை : 'பழைய 5,10 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற உள்ளதாக வெளியான தகவல் தவறு' என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாக தகவல் வெளியானது. 'மார்ச் 21க்குள் பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் அவற்றை மாற்ற முடியாது; அவை செல்லாததாகி விடும்' என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஏராளமானோர் பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுக்களுடன் வங்கிகளுக்கு படையெடுத்தனர். அவர்களை 'அதுபோல உத்தரவு எதுவும் வரவில்லை' என வங்கிகள் திருப்பி அனுப்பி வந்தன. இதையடுத்து பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் ரத்தாகாது' என மத்திய அரசு நேற்று முன்தினம் தெரிவித் திருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி எதுவும் தெரிவிக்காதது குழப்பத்தை ஏற்படுத்தியது.


latest tamil news



இந்நிலையில் நேற்று ரிசர்வ் வங்கி 'டுவிட்டரில்' வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இது தவறான செய்தி. இதை யாரும் நம்ப வேண்டாம். பழைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami Sampath - mumbai,இந்தியா
27-ஜன-202107:47:41 IST Report Abuse
Ramaswami Sampath ஐந்து ரூபாய்க்கு என்ன கிடைக்கிறது?
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
26-ஜன-202123:11:09 IST Report Abuse
Vijay D Ratnam இதுபோன்ற புரளியை ஜஸ்ட் லைக் தட் என்று இக்னோர் செய்துவிடக்கூடாது. இது வேலை வெட்டி இல்லாதவன் செய்யும் வேலை அல்ல. பக்காவாக பிளான் செய்து செய்யும் வேலை. வேறு ஏதாவது மொள்ளமாரித்தனம் செய்ய இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு இன்று ராணுவம் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. வல்லரசுகள், பணக்கார நாடுகளெல்லாம் சிக்கி சின்னாபின்னம் ஆகிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கொரோனாவை சிறப்பாக கையாண்டு அதற்கு தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சாதனைகள் குடியரசு தின உரையில் வெளிப்பட்டு உலகம் முழுக்க எதிரொலிக்கும். அதை சீர்குலைக்கத்தான் விவசாயிகள் என்ற போர்வையில் இன்று டெல்லியில் நடத்தப்பட்ட புரோக்கர்கள் ரவுடித்தனம்.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
26-ஜன-202117:16:25 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த ரூபாய் நோட்டுகள் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாதாதாக்கப்படவில்லை என்றாலும் அவற்றை மக்கள் செல்லாததாக ஆகிவிட்டதால் எங்கு பார்த்தாலும் அவற்றை நிராகரிக்கின்றனர்.இந்த நாட்டில் சட்டம் தன கடமையை செய்யவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X