பொது செய்தி

இந்தியா

பெங்களூரு - கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, இணைப்பு ஏற்படுத்தும், வாயு வஜ்ரா பஸ்களில் இ - புக்கிங்

Added : ஜன 26, 2021
Share
Advertisement
பெங்களூரு - கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, இணைப்பு ஏற்படுத்தும், வாயு வஜ்ரா பஸ்களில் இ - புக்கிங் மூலம், இருக்கை முன் பதிவு செய்ய வாய்ப்பளித்தும், இதை பயன்படுத்த பயணியர் முன் வரவில்லை.பெங்களூரின் வெவ்வேறு இடங்களிலிருந்து, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும், பயணியர் நலனுக்காக, இ - புக்கிங் மூலம், வாயு வஜ்ரா பஸ்களில், இருக்கை முன் பதிவு செய்து

பெங்களூரு - கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, இணைப்பு ஏற்படுத்தும், வாயு வஜ்ரா பஸ்களில் இ - புக்கிங் மூலம், இருக்கை முன் பதிவு செய்ய வாய்ப்பளித்தும், இதை பயன்படுத்த பயணியர் முன் வரவில்லை.பெங்களூரின் வெவ்வேறு இடங்களிலிருந்து, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும், பயணியர் நலனுக்காக, இ - புக்கிங் மூலம், வாயு வஜ்ரா பஸ்களில், இருக்கை முன் பதிவு செய்து கொள்ள, பி.எம்.டி.சி., வாய்ப்பளித்திருந்தது. இந்த வசதியை, சிலர் மட்டுமே, பயன்படுத்துகின்றனர்.பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:கொரோனாவால், விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் விமான நிலையத்துக்கு செல்வோர் எண்ணிக்கையும், கணிசமாக குறைந்துள்ளது.விமான நிலையத்துக்கு, 2020 மார்ச்சில், 120 பஸ்கள், இயக்கப்பட்டது. பயணியர் எண்ணிக்கை குறைந்ததால், தற்போது, 61 பஸ்கள் இயக்கப்படுகிறது.முந்தைய மாதம், வெறும், 63 ஆன்லைன் புக்கிங் ஆனது. இதில் 47 டிக்கெட்டுகள், நகரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு செல்ல, முன் பதிவு செய்யப்பட்டது.விமான நிலையத்திலிருந்து, நகருக்கு திரும்ப, வெறும் 16 டிக்கெட்டுகள் மட்டுமே பதிவானது. ஜன., 18 வரை, வெறும் 43 டிக்கெட்டுகள் மட்டுமே, முன் பதிவானது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X