பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட, கன்னட நடிகை ராகினிக்கு, ஜாமின் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட, கன்னட நடிகை ராகினிக்கு, ஜாமின்

Added : ஜன 26, 2021
Share
பெங்களூரு - போதை பொருள் பயன்பாடு, விற்பனை தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட, கன்னட நடிகை ராகினிக்கு, ஜாமின் கிடைத்ததால், 145 நாட்களுக்கு பின், நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.போதை பொருள் விற்பனை, பயன்படுத்தியது தொடர்பாக, கன்னட நடிகையர் ராகினி, சஞ்சனா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில்

பெங்களூரு - போதை பொருள் பயன்பாடு, விற்பனை தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட, கன்னட நடிகை ராகினிக்கு, ஜாமின் கிடைத்ததால், 145 நாட்களுக்கு பின், நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.போதை பொருள் விற்பனை, பயன்படுத்தியது தொடர்பாக, கன்னட நடிகையர் ராகினி, சஞ்சனா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இதில், நடிகை சஞ்சனாவுக்கு, கடந்த மாதம், கர்நாடகா உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதே வேளையில், நடிகை ராகினிக்கு, ஜாமின் மறுக்கப்பட்டது.இந்நிலையில், அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கு, கடந்த, 21ல் விசாரணைக்கு வந்தது. அப்போது நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு, சிறை நிர்வாகத்துக்கு நேற்று தான் கிடைத்தது.இதையடுத்து, நேற்றிரவு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நடிகை ராகினி வெளியே வந்தார்.மொத்தம், 145 நாட்கள், அவர் சிறையில் இருந்துள்ளார்.சிறையிலிருந்து வெளியே வந்த பின், ராகினி கூறியதாவது:எனக்கு, என் குடும்பத்தினர் ஆசிர்வாதம் உள்ளது.கஷ்ட காலத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும், ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கும் நன்றி.கைது செய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே, நமது நீதி முறையின் மீது நம்பிக்கை இருந்தது. எனது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி. சத்தியம் என்ன என்பது இப்போது தெரிந்துள்ளது. 'சத்யமேவ ஜெயதே'.தற்போது என் குடும்பத்தினருடன் இருக்க விரும்புகிறேன். விரைவில் என் வழக்கு தொடர்பாக, செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X