சென்னை : நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
சென்னை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள திடலில் கவர்னர் பன்வாரிலால் தேசியக் கொடியை ஏற்றினார். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏற்றி வைத்த கவர்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

முப்படை, காவல்துறை, என்சிசி என பல்வேறு படைகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான அண்ணா விருது, காந்தியடிகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். கொரோனா அச்சுறுத்தலால் இந்தாண்டு மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE