பொது செய்தி

இந்தியா

டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி துவங்கியது

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: திட்டமிட்டதற்கு முன்னதாகவே விவசாயிகள் டிராக்டர் பேரணியை துவக்கியதால் டில்லியில் பதற்றம் நிலவுகிறது.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினமான இன்று (ஜன.,26), டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள்
FarmLaws, Farmers, TractorRally, Delhi, டில்லி, விவசாயிகள், வேளாண் சட்டங்கள், டிராக்டர் பேரணி

புதுடில்லி: திட்டமிட்டதற்கு முன்னதாகவே விவசாயிகள் டிராக்டர் பேரணியை துவக்கியதால் டில்லியில் பதற்றம் நிலவுகிறது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினமான இன்று (ஜன.,26), டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் டில்லி நோக்கி படையெடுத்தனர். குடியரசு தினத்தை சீர்குலைக்க கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் டிராக்டர் பேரணிக்கு டில்லி போலீசார் அனுமதியளித்தனர்.


latest tamil newsஇதனையேற்ற விவசாய சங்கங்கள், குடியரசு தின விழா முடிந்தபிறகு பகல் 11:30க்கு பேரணி துவங்கப்படும் என அறிவித்தனர். இந்நிலையில், அதற்கு முன்னதாகவே 9 மணியளவில் சிங்கு எல்லையிலிருந்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை விவசாயிகள் துவக்கினர். கஞ்சவாலா சொவுக் - ஆச்சண்டி எல்லை வரையில் பேரணி துவங்கியது.

டில்லி -ஹரியானா எல்லைப்பகுதியான டிக்ரி பகுதியில் போலீசார் அமைத்த தடுப்புகளை தகர்த்து விவசாயிகள் பேரணியை நடத்தினர். குடியரசு தினத்தில் நாட்டின் தலைநகரில் கிட்டத்தட்ட 2 லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடந்துவருவதால் பதற்றம் நிலவுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
26-ஜன-202111:55:51 IST Report Abuse
 N.Purushothaman ஒருத்தரு முப்பத்தி அஞ்சி லட்சம் செலவு செஞ்சி தனது டிராக்டரில் ஜி பி எஸ் ,நீர் புகா கட்டமைப்பு ,உயர் தர ம்யூசிக் சிஸ்டம் எல்லாம் இந்த பேரணிக்காக அவரோட டிராக்டரை மாற்றி வச்சி இருக்காராம் ...அவரு விவசாயின்னு சொன்னால் நாமளும் நம்பிடனும் ...
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜன-202111:30:55 IST Report Abuse
Yaro Oruvan விவசாயி என்ற போர்வையில் இவர்கள் செய்யும் அட்டூழியம் நாட்டிற்கு கேடு.. இந்தியா முழுக்க உள்ள மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் வேளாண் சட்டத்தை வரவேற்கிறார்கள்.. பஞ்சாப் மட்டும் விதி விலக்கு ? ஏன் அங்கு கான்+கிராஸ் ஆட்சி அதனாலா? இவர்களை பார்த்தால் விவிசாயி என்ற எண்ணம் வரவில்லை.. கோதுமைக்கு மட்டும் அரசு அதிக குறைந்தபட்ச விலை நிர்ணயித்து இவர்களை இந்த அளவிற்கு வளர்த்தது தவறோ என்ற எண்ணம் தோன்றுகிறது.. மற்ற மாநிலங்களில் எத்தனை விவாசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்துள்ளனர்.. ஆனால் பஞ்சாபில் நிலைமை வேறு .. இவர்களின் கொட்டம் அடக்கப்பட வேண்டும் .. நாடு முழுக்க விவசாயிகள் பயன் பெறுமாறு இந்த சீர்திருத்த சட்டத்தை மோடி மிகவும் கண்டிப்புடன் அமுல் செய்ய வேண்டும்.. ஜைஹிந்..
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
26-ஜன-202111:24:45 IST Report Abuse
sahayadhas ரிலைன்ஸ் Communication tower 25000 மேல் நொறுக்கப்பட்டுள்ளது, Jio அரிசி Packet கள் விற்க முடியாமல் தவிப்பு. ஐயா, மத்தளம் போல் , 1 வாரம் தடை, 2 மாதம் தடை, 2 வருடம் தற்காலிக நிறுத்தம், அப்புறம் 20 வருடம் நிருத்தம் , அப்புறம் அழுதுருவேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X