புதுடில்லி: நாடு முழுவதும் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று இருப்பதால் டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட தலைநகரங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கை நபர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் காலை 10 மணிக்கு துவங்கிய விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து ராணுவ வீரர்ரகளின் அணிவகுப்பை ஏற்று கொண்டார். பிரதமர் மோடி முன்னதாக போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக யாரும் பங்கேற்கவில்லை.

வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவு அடைவதை முன்னிட்டு இந்த நாட்டு ராணுவ வீரர்கள் இன்றயை அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். இது இரு நாட்டு உறவை வலுப்பெற செய்யும் என அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.

ரபேல் விமானம் பங்கேற்பு
குடியரசு தின விழாவில் ரபேல் விமானம் இன்று இடம் பெற்று சாகசம் செய்கிறது.
பிரதமர் மோடி தனது டுவிட்டரில்; நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் ! ஜெய்ஹிந்த். என பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE