பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திலும் விவசாயிகள் பேரணி

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை: டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர், இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்தினர். ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லியில் போராடும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பேரணி நடந்து வருகிறது.தஞ்சாவூரில் நடக்கவிருந்த டிராக்டர் பேரணிக்கு
தமிழகம், விவசாயிகள், பேரணி,

சென்னை: டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர், இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்தினர். ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லியில் போராடும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பேரணி நடந்து வருகிறது.

தஞ்சாவூரில் நடக்கவிருந்த டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து, டெல்லியில், விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது. அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் எதிர்கட்சியினர் பங்கேற்ற போராட்டங்கள் நடந்தன. திருவாரூரில் டிராக்டர் பேரணி நடந்தது. திருத்துறைப்பூண்டி, தண்டலை பகுதிகளில் பேரணி செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. காவல்துறை தடுப்புகளை டிராக்டரால் மோதி தகர்த்து எறிந்து முன்னேறி சென்றனர். போலீசார் தடுத்ததால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. நாகையில் விவசாயிகளுடன் எதிர்கட்சியினர் டிராக்டர் பேரணி நடத்தினர். புத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பேரணியை அதிவிரைவு படையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னேறி சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்துபோக செய்தனர். தஞ்சை மேலவஸ்தா சாவடியில் மாட்டுவண்டியில் பேரணி செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் அனுமதிக்கவில்லை. தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. மறியலும் செய்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுமதித்தனர். பல இடங்களில் தடைகளை மீறி டிராக்டர் பேரணியும் நடந்தது. கடலூரில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. ஜவான் பவன் அருகே தொடங்கி பாரதி சாலை நகராட்சி பள்ளி அருகே வந்தபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர்.


latest tamil news



டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியிலும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். திருச்சி கொள்ளிடம் பாலம் பகுதியில் இருந்து பேரணியாக சென்று, மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். உழவர் சந்தையிலும், இருசக்கர வாகனத்தில் பேரணி நடந்தது. அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடலூரிலும் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தினர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இரு சக்கர வாகனத்தில் தேசிய கொடி கட்டி பேரணி நடந்தது.

சென்னை சேப்பாக்கத்தில் இருந்து தொ.மு.ச., சங்கத்தினர் ஆட்டோவில் பேரணியாக சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
27-ஜன-202110:23:34 IST Report Abuse
vbs manian பவார் பாதல் கட்சியிலிருந்து இவர்களுக்கும் உதவி வந்ததோ
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜன-202108:38:58 IST Report Abuse
Lion Drsekar இவர்களுக்கெல்லாம் காவல் துறை, நீதிமன்றம் என்பதே அகராதியில் இல்லை, இதே போன்று எல்லா மக்களும் தங்கள் தேவைக்கு இதுபோன்று செய்ய ஆரம்பித்தால் முடிவு. வழிகாட்டவேண்டிய இவர்களே இப்படி நடந்துகொண்டால் எதிர்காலத்தில் நாட்டின் போக்கு?? வந்தே மாதரம்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-ஜன-202104:42:53 IST Report Abuse
வெகுளி பட்டாசு சத்தம் கேக்க ஆசைப்படறாங்க ... இவங்கள போயி விவசாயின்னு சொல்றீங்களே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X