புதுடில்லி: டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் பட்டாச்சார்யா உள்ளிட்ட சில கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றதாக தெரிகிறது. போலீசாரின் தடையை மீறி சில பகுதிகளில் விவசாயிகள் பேரணி நடத்தியதால், அப்பகுதியில் வன்முறை வெடித்தது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில், திடீரென வன்முறை ஏற்படவே போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினார். போலீசார் அனுமதி வழங்கிய பகுதியில் பேரணி நடத்தாமல், தடையை மீறி டில்லி செங்கோட்டைக்குள் விவசாயிகள் நுழைந்தனர். அங்கு விவசாய சங்கங்களின் கொடியை விவசாயிகள் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

முன்னதாக விவசாயிகள் நடத்திய இப்பேரணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அக்கட்சிகளின் சில எம்.பி.,க்களும் போராட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அரசியல் தலைவர்கள் பங்கேற்ற போராட்டம் வன்முறையாக வெடிக்க சிலர் தூண்டியிருக்கலாம் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE