ஊக்கமது கைவிடேல்

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021
Share
Advertisement
கால் ஊனமுற்றவர்கள் முப்பது பேர் காஷ்மீரில் ஆரம்பித்து தங்கள் சைக்கிள் பயணத்தை 45 நாட்களுக்கு பிறகு கன்னியாகுமரியில் நிறைவு செய்து சாதித்துள்ளனர்.‛இன்ஃபினிட்டி ரைட்' என்ற தலைப்பிட்டு கொடூரமான பனியில்,சவாலான ரோட்டில் 43 நாட்கள்,3,842 கிலோ மீட்டர் துாரம் பயணம் செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர், இந்த சாதனையாளர்களில் தான்யா என்ற பெண் சைக்கிள் ஒட்டுனரும்



latest tamil news


கால் ஊனமுற்றவர்கள் முப்பது பேர் காஷ்மீரில் ஆரம்பித்து தங்கள் சைக்கிள் பயணத்தை 45 நாட்களுக்கு பிறகு கன்னியாகுமரியில் நிறைவு செய்து சாதித்துள்ளனர்.
‛இன்ஃபினிட்டி ரைட்' என்ற தலைப்பிட்டு கொடூரமான பனியில்,சவாலான ரோட்டில் 43 நாட்கள்,3,842 கிலோ மீட்டர் துாரம் பயணம் செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர், இந்த சாதனையாளர்களில் தான்யா என்ற பெண் சைக்கிள் ஒட்டுனரும் உண்டு.


latest tamil news


ஆதித்தியா மேத்தா என்ற தொழிலதிபர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு விபத்தில் கால் துண்டிக்கப்பட்டார் இதனால் ஆரம்பத்தில் துவண்டு போனாலும் பின் தனது கவனத்தை சைக்கிள் ஒட்டுவதில் செலுத்தனார்.ஒற்றைக்காலுடன் ஒரு முறை இவுர் நீண்ட சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது கிடைத்த ஆதரவையும் அன்பையும் உணர்ந்தவர் தன்னைப் போலவே ஊனமுற்ற வீரர்களை சைக்கிள் ஒட்டுவதில் உற்சாகப்படுத்துவதற்காக ஆதித்தியா மேத்தா அறக்கட்டளை துவக்கி நடத்திவருகிறார்.இவர்களுக்கு பயிற்சி வழங்கி உலகில் எங்கு ஊனமுற்றவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தாலும் அதில் பங்கேற்கவும் செய்து வருகிறார்.இதன் மூலம் கால் ஊனமுற்றவர்கள் உற்சாகம் பெற்று வருகின்றனர்.
கால் ஊனம் என்று இல்லை எப்படிப்பட்ட ஊனமாக இருந்தாலும் அவர்களுக்குள் விளையாட்டு திறமை இருந்தால் அவர்களை உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த நவம்பர் 19 ம்தேதி ஆரம்பித்த சைக்கிள் பயணம் குறிப்பிட்டபடி டிசம்பர் 31 ந்தேதி கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.
முப்பது சைக்கிள் வீரர்களும் 36 நகரங்களை கடந்து வந்துள்ளனர் பல இடங்களில் சமூக ஆர்வலர்களையும்,உடல் ஊனமுற்ற பள்ளி மாணவர்களையும் சந்தித்து ஊனமுற்றவர்களுக்கான விளையாட்டு வாய்ப்பு பற்றி பேசியுள்ளனர்.இவர்களின் பயணத்திற்கு எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎஃப்) ஆகியவை உதவியுள்ளன.
"எங்களின் இந்த விழிப்புணர்வு சவாரி இந்தியாவின் சிறந்த பாரா விளையாட்டு திறனுள்ளவர்களை கண்டுபிடித்து உற்சாகம் தந்து வழிகாட்டவும் செய்தது. இந்த நீண்ட பயணத்தில் எங்களிடம் நிபந்தனையற்ற அன்பைக் காட்டிய மக்களுக்கு நன்றி ,இதன் மூலம் இன்னும் சில உடல் ஊனமுற்ற சைக்கிள் சாம்பியன்களை உருவாக்கி அவர்களை இந்தியாவிற்காக விளையாடச் செய்து ஹீரோக்களாக்குவதே எங்கள் லட்சியம் என்றார் என்று ஆதித்யா மேத்தா கூறினார்.
ஆதித்யா மேத்தா அறக்கட்டளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கிழே உள்ள இணையம் மூலம் தொடர்பு கொள்ளவும்.
https://adityamehtafoundation.org/
-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X