பொது செய்தி

இந்தியா

மத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் இதுவரை அமைதியாக நடந்து வந்த போராட்டம் இன்று (ஜன.,26) வன்முறையாக மாறியது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், இன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணிக்கு டில்லி போலீசார் அனுமதி வழங்கியிருந்தாலும், பல
வேளாண் மசோதா, விவசாயிகள், போராட்டம்,

புதுடில்லி: டில்லியில் இதுவரை அமைதியாக நடந்து வந்த போராட்டம் இன்று (ஜன.,26) வன்முறையாக மாறியது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், இன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணிக்கு டில்லி போலீசார் அனுமதி வழங்கியிருந்தாலும், பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை விதித்தனர். ஆனால், இன்றைய பேரணியானது போலீசார் அனுமதி வழங்கிய பகுதிளை தாண்டி மற்ற பகுதிகளுக்கும் சென்றது. டில்லி செங்கோட்டையிலும் விவசாயிகள் நுழைந்தனர்.

இதனையடுத்து அவர்களை கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார் தடியடி நடத்தினர். விவசாயிகளும் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். இந்த மோதலில் சில போலீசார் காயமடைந்துள்ளனர்.


latest tamil news
இதனை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அமித்ஷா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள், டில்லி போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
27-ஜன-202107:17:41 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga டில்லி செங்கோட்டையில் எப்போது காலிஸ்தான் கொடியை ஏற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார்களோ இவர்கள் விவசாயி என்கிற போர்வையில் புகுந்துள்ள காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான். இவர்களையும் இந்த போராட்டத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். இனியும் தாமதம் செய்யவே கூடாது.
Rate this:
Raj - Namakkal,சவுதி அரேபியா
27-ஜன-202111:32:44 IST Report Abuse
Rajஇபோது எல்லோருக்கும் துணிச்சல் வந்து விட்டது...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-ஜன-202104:33:40 IST Report Abuse
J.V. Iyer இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிகளிடம் எதை எதிர்பார்ப்பது என்று தெரிய வேண்டாமா? இந்த கயவர்களுக்கு இவ்வளவு இடம் கொடுத்ததே தப்பு.
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
26-ஜன-202122:12:27 IST Report Abuse
Mannai Radha Krishnan அடிச்சு....கை..கால ஒடச்சி கலவரத்தை அடக்குங்க......இது நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகமானது, ஆனால் ஒரு சிலரது தனி வளர்ச்சிக்கு ஆதரவானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X