பொது செய்தி

இந்தியா

சமூக விரோதிகள் ஊடுருவல்: விவசாய சங்கம்

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவியதாக, டிராக்டர் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த விவசாய அமைப்புகளில் ஒன்றான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்றைய பேரணியில், எதிர்பார்க்காத அளவுக்கு பங்கேற்ற விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

புதுடில்லி: விவசாயிகள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவியதாக, டிராக்டர் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த விவசாய அமைப்புகளில் ஒன்றான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news




இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்றைய பேரணியில், எதிர்பார்க்காத அளவுக்கு பங்கேற்ற விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பேரணியில் எதிர்பார்க்காத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நடந்ததற்கு கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம். இது போன்ற செயல்களில் இருந்து நாங்கள் எங்களை விடுவித்து கொள்கிறோம்.


latest tamil news




எங்களின் கடுமையான முயற்சிகளை மீறி, சில அமைப்புகள் மற்றும் தனி நபர்கள், அனுமதிக்கப்படாத பகுதிகளில் சென்று, கண்டனத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டனர். சில சமூக விரோதிகள் ஊடுருவினர். இல்லையென்றால், போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும். அமைதியே எங்களது பெரிய பலம் என்ற கொள்கையில் உளுதியாக உள்ளோம். எந்த விதிமீறலும் போராட்டத்தை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



பாரதிய கிஷான் சங்கத்தின் ராகேஷ் திகாயத் கூறுகையில், இடையூறு ஏற்படுத்தியவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களை கண்டுபிடித்துள்ளோம். எங்களது போராட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த, சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் முயற்சி செய்கின்றனர் என தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
27-ஜன-202116:29:32 IST Report Abuse
M.COM.N.K.K. வலிமை உள்ளவன் வச்சதெல்லாம் சட்டம் ஆகாது தம்பி பிறர் வாழ உழைப்பவன் சொல்வதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
27-ஜன-202110:58:33 IST Report Abuse
Nellai tamilan போராட்டம் யார் தலைமையில் நடந்தது? அவர்கள் தான் வன்முறைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
Rate this:
Cancel
s.srikanth - chennai,இந்தியா
27-ஜன-202110:43:38 IST Report Abuse
s.srikanth ஏன், உன் பேர் வெங்கட்ராமன் அய்யர் என்று போட்டா நாங்க நம்பிடுவோமா. நீ எந்த கம்மியூனிட்டி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X