எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஆன்மிகவாதியாக அழுத்தமாக பதிவு செய்த இ.பி.எஸ்.,: அனைத்து மதமும் சமம்; வேஷம் போடாமல் வெளிப்படை

Added : ஜன 26, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கோவை: கோவையில் இரு நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்த, முதல்வர் பழனிசாமி, வெளிப்படையாகவே, தன்னை ஆன்மிகவாதியாக, அழுத்தம் திருத்தமாக, பதிவு செய்தார். முதல்வரின் இச்செயல், மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார், முதல்வர் பழனிசாமி. ஒரு தொகுதி கூட விடுபடாத அளவுக்கு,
 ஆன்மிகவாதியாக அழுத்தமாக பதிவு செய்த இ.பி.எஸ்.,:  அனைத்து மதமும் சமம்; வேஷம் போடாமல் வெளிப்படை

கோவை: கோவையில் இரு நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்த, முதல்வர் பழனிசாமி, வெளிப்படையாகவே, தன்னை ஆன்மிகவாதியாக, அழுத்தம் திருத்தமாக, பதிவு செய்தார். முதல்வரின் இச்செயல், மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார், முதல்வர் பழனிசாமி. ஒரு தொகுதி கூட விடுபடாத அளவுக்கு, பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. திறந்தவெளி வேனில், 350 கி.மீ., பயணித்து, 23 இடங்களில் பேசினார்.கோவையின், காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் தரிசித்து, பிரசாரத்தை துவக்கினார்.

பயணத்தின்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பேரூர் ஆதினத்துக்குள் நுழைந்தார். முதல்வருக்கு நெற்றியில் திருநீறு பூசி, மருதாசல அடிகள் அருளாசி வழங்கினார்.

பிரசாரத்துக்கு இடையே, போத்தனுாரில், அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இஸ்லாமியர்களுக்கு வழங்கிய நலத்திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர், ''சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்; அவரவர் மதம், கடவுள் அவரவருக்கு புனிதமானது. அவர்களை பாதுகாப்பது எங்களது கடமை; இம்மியளவு கூட விலக மாட்டோம். உங்களுக்கு அரசு துணை நிற்கும்,'' என்றார்.

பின், பொள்ளாச்சி சென்ற முதல்வர், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்குச் சென்று, வணங்கினார்.

இரண்டாம் நாள், புலியகுளம் விநாயகர் கோவிலில் தரிசித்து விட்டு, பிரசாரத்தை துவக்கினார். மேட்டுப்பாளையம் சென்றபோது, காரமடை ரங்கநாதரை தரிசித்தார். திரும்பி வரும் வழியில், மரியம் தேவாலயத்துக்குச் சென்று, பிரார்த்தனை செய்தார். வெளிப்படையாகவே, அனைத்து மத வழிபாடுகளிலும் முதல்வர் பங்கேற்றார்.

தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக, 'எனது மனைவி போகாத கோவில் இல்லை' என்றும், பிரசார கூட்டத்துக்கு இடையே, வேல் பிடித்து, 'போஸ்' கொடுக்கும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போல் வேஷம் போடாமல், எங்களுக்கு அனைத்து மதமும் சமம் என்பதை, பிரசார கூட்டத்துக்கு இடையே, வெளிப்படையாக, ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாக, முதல்வர் பழனிசாமி பதிவு செய்திருக்கிறார். அவரது, கோவை பிரசார பயணம், அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - chennai,இந்தியா
31-ஜன-202116:41:15 IST Report Abuse
Raja ஸ்டாலினின் இந்த நடவடிக்கை அவருக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தும். அவர் என்ன தான் இப்படி பட்ட காரியங்களை செய்தாலும் மத அடிப்படையில் ஒட்டு போடும் ஹிந்துக்கள் அவரை நம்ப போவதில்லை. செயல் அடிப்படையில் ஒட்டு போடுபவர்கள் இதை குறித்து கண்டுகொள்ள போவதில்லை. எனவே இது ஸ்டாலின் அவர்களுக்கு எந்த வகையிலும் உதவாது. மாறாக ஸ்டாலின் குறித்து சிறுபான்மையினர் மறுபரீசலனை செய்வார்கள். எனவே ஸ்டாலின் அவர்களுக்கு இந்த திட்டத்தை யார் வகுத்து கொடுத்திருந்தாலும் சிறிதளவும் அரசியல் அறிவு இல்லாதவர்களாக தான் இருக்கும்.
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
31-ஜன-202112:26:41 IST Report Abuse
Swaminathan Chandramouli வச்சா குடுமி, வழித்தால் மொட்டை, இடம் ,பொருள் ஏவலுக்கு தகுந்தாற்போல் திமுக. அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் தங்கள் உருவத்தையும் , நிலையையும் மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியை போல
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
30-ஜன-202116:05:22 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ துன்னூறு குங்குமம் வைக்கவேண்டியது சந்தர்பத்துக்கு தக்கவாறு அதை அழிக்கவேண்டியது, அழிச்சிட்டு குல்லா மாட்டவேண்டியது இல்ல ரெண்டையும் சேந்து வச்சிகிறது, துப்லிக் கொரோனா டையத்துல கையில குரோனா பழம் எல்லாம் குடுத்து இலவச சிகிச்சை செய்வது, கீதை காரங்களுக்கு கொரோனா பரவஆரம்பிச்ச டையத்துல தனியார் ஆசுபத்திரிக்கு ஆள புடிச்சுகுடுத்து 3லச்சம் பில் தீட்டி சம்பாரிப்பது,வீட்டுக்கு தகரம் அடிக்க மருந்துஅடிக்கனு 50ஆயிரம் 80ஆயிரம்னு சம்பாரிக்க வேண்டியது, தேர்தல் பத்கத்துல வந்துட்டா மட்டும் கழகங்கள் பக்திப் பழங்களாகிவிடும், தேர்தல் முடிந்தபின் இந்து தெய்வங்கள் தீண்டாமை தொத்திக்கும்(கோயில் சிலை சொத்துக்கள் ஆட்டை ஆட்டம் மட்டும் தொடரும்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X