புதுச்சேரி,:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும், தீப்பாய்ந்தானும் இன்று ( ஜன. 27) பா.ஜ.,வில் இணைகின்றனர்.புதுச்சேரி காங்கிரஸ் அரசில், பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், தன் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தார். அவருடன் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தானும், தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இருவரும் நேற்று ( ஜன.26) மாலை, சென்னையில் இருந்து, விமானத்தில் டில்லி சென்றனர். டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இன்று ( ஜன. 27) காலை, 11:00 மணிக்கு பா.ஜ.,வில் இணைகின்றனர். தொடர்ந்து, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, வாழ்த்து பெறுகின்றனர்.வரும் 31ம் தேதி புதுச்சேரியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வரும் நட்டா முன்னிலையில், ஆதரவாளர்களுடன் கலந்து கொள்கின்றனர்.***
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE