புதுடில்லி : சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க, பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கும் திட்டத்திற்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.
பழைய வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கு, அதிக அளவில் மாசு ஏற்படுத்துவதால், அவற்றுக்கு பசுமை வரி விதிக்க, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதற்கு, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துஉள்ளார்.
இதன்படி, எட்டு ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும் சரக்கு வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் நேரத்தில், பசுமை வரி செலுத்த வேண்டும்.
இது, அவர்கள் செலுத்தும் சாலை வரியில், 10 முதல், 25 சதவீதம் வரை இருக்கலாம் என, தெரிகிறது. சொந்த வாகனங்களுக்கு, 15 ஆண்டுகளுக்குப் பின் பதிவுச்சான்று புதுப்பிக்கும்போது, பசுமை வரி செலுத்த நேரிடும்.வசூலிக்கப்படும் பசுமை வரி, சுற்றுச்சூழல் மாசுபாட்டினை நீக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
மக்கள், பழைய வாகனங்கள் உபயோகிப்பதை தடுத்து, குறைந்த மாசு ஏற்படுத்தும் புதிய வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது.இதற்கிடையே, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 15 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களின் பதிவுச்சான்று, மீண்டும் புதுப்பிக்கப்படாது.அவற்றை, 'ஸ்கிராப்' ஆக மாற்றும் திட்டம், அடுத்த ஆண்டு ஏப்., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE