அரசியல் செய்தி

தமிழ்நாடு

நம்நாட்டு கொரோனா மருந்துக்கு கடும் கிராக்கி: மோடிக்கு சேருகிறது உலக அளவிலான புகழ்

Updated : ஜன 26, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
கோவை:''கொரோனா காலத்தில் மிகச்சாதுர்யமாக செயல்பட்டு மக்களை காப்பாற்றியதோடு, குறுகிய காலத்தில் நோய் தடுப்பு மருந்தை கண்டறிந்து பல நாடுகளுக்கு இலவசமாக வழங்கி உலக அரங்கில் நன்மதிப்பை பெற்றுள்ளார் நம் பிரதமர்,'' என்று பா.ஜ., துணைத்தலைவர் கூறினார்.பா.ஜ.,வில் அங்கம் வகிக்கும் பல்வேறு அணிகளின் அலங்கார அணிவகுப்பு வாகன ஊர்வலம் நேற்று மாலை கோவையில் நடந்தது.

கோவை:''கொரோனா காலத்தில் மிகச்சாதுர்யமாக செயல்பட்டு மக்களை காப்பாற்றியதோடு, குறுகிய காலத்தில் நோய் தடுப்பு மருந்தை கண்டறிந்து பல நாடுகளுக்கு இலவசமாக வழங்கி உலக அரங்கில் நன்மதிப்பை பெற்றுள்ளார் நம் பிரதமர்,'' என்று பா.ஜ., துணைத்தலைவர் கூறினார்.latest tamil newsபா.ஜ.,வில் அங்கம் வகிக்கும் பல்வேறு அணிகளின் அலங்கார அணிவகுப்பு வாகன ஊர்வலம் நேற்று மாலை கோவையில் நடந்தது. தெப்பக்குளம் மைதானத்தில் துவங்கிய ஊர்வலம், சுக்கிரவார்பேட்டை, தியாகிகுமரன் வீதி வழியாக ராஜவீதியை அடைந்தது.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.,மாநில துணைத்தலைவர் கனகசபாபதி பேசியதாவது: கொரோனா சீனாவில் துவங்கி உலக அளவில் பரவி உயிர் பலியை ஏற்படுத்தி கடும் துயரத்தை உருவாக்கியது. நம் நாட்டில் மார்ச்சில் துவங்கியது படிப்படியாக குறைந்து தற்போது நிம்மதியாகி இருக்கிறோம்.
மிகக் குறுகிய காலத்தில்,நம் நாட்டின் சொந்த தயாரிப்பில் ஒரு தடுப்பு மருந்தையும், ரஷ்யாவின் உதவியோடு மற்றொரு மருந்தையும் கண்டறிந்தோம். அதை நாம் கொரோனா ஒழிப்புப்பணியில் ஈடுபட்ட டாக்டர்கள், மருத்துவபணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம்.
இந்நிலையில் நமது நேச நாடுகளான, மியான்மர், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, நோபாள், பூட்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறோம்.
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சொனரோ, நம் நாட்டு மருந்துகளை பெற்றுக்கொண்டு, ராமாயணத்தில்; லட்சுமணரை காப்பாற்றிய ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து வந்த படத்தை ஓவியமாக தீட்டி பிரதமர் மோடிக்கு அனுப்பி, எங்களை காப்பாற்றி ஆஞ்சநேயர் மோடி என்று நன்றி தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇச்சூழலில் உலக அளவில் உள்ள, 132 நாடுகளில் 90 நாடுகள் நம்மிடம் கொரோனா மருந்து கேட்டு அதை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. கடந்த பத்து நாட்களில் நம் நாடு மட்டுமல்ல, உலக அரங்கில் மோடியின் புகழ் ஓங்கி ஒலிக்கிறது.வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆள வேண்டும். தமிழக சட்டசபைக்கு அதிக எண்ணிக்கையிலான பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் செல்ல வேண்டும். இவ்வாறு கனகசபாபதி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.,மாநில பொதுசெயலாளர் செல்வகுமார், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு அணிகளின் அலங்கார அணிவகுப்பு வாகன ஊர்வலத்தில், ராமர்,லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் வேடமணிந்தவர்கள். வர்த்தக, மருத்துவ, விவசாயம் உள்ளிட்ட, 25 அணிகளின், 20 அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அதன் பின் திரளான தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-ஜன-202114:57:29 IST Report Abuse
ஆரூர் ரங் அரசின் சாதனையா இது எனக் கேட்கும் மிர்த்திகா . காங்கிரஸ் அரசுதான் IDPL ஐ டி பி எல் எனும் அரசு மருந்து நிறுவனத்தை துவக்கியது. இன்றைய மதிப்பில் ஆயிரக்கணக்கான கோடி வரிப்பணம் முதலீடாகப் போடப்பட்டது. வளமான விவசாய நிலங்கள் வாங்கப்பட்டு அதற்கு கொடுக்கப்பட்டது ஒரே ஒரு மருந்தைக் கூட கண்டுபிடிக்காமல் கடும் நட்டதால் காங்கிரஸ் காலத்திலேயே திவாலானது. காங் ஆட்சிகாலத்தில் ஏன் ஒரே ஒரு தடுப்பு மருந்து கூட இந்தியாவில் கண்டு பிடிக்கவில்லை? உங்க கழகத்தின் ஒரே சாதனை போலி மருந்து தயாரித்து மாட்டிக்கொண்ட மீனாட்சி சுந்தரத்திடமிருந்து கப்பமாக சுடலை மருமகன் சொகுசு கார் பெற்றதுதான்
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
27-ஜன-202117:08:57 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஇன்னும் எத்தனைவருசத்துக்கு இந்த காங்கிரஸ் புராணம் பாடுவீங்க...அவங்க சரியில்லைன்னு நெனெச்சு மக்கள் உங்களை தேர்ந்தெடுத்த மறுபடியும் மொதல்ல இருந்தா? காங்கிரஸ் ஊலழ்ன்னு சொண்ணீங்க...கிட்டத்தட்ட இந்த ஆறுவருச ஆட்சியில ஊழல் கொறஞ்சிடுச்சா? வெளிப்படைத் தன்மையை ஆய்வு செய்யும்"டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல்' என்கிற சர்வதேச தன்னார்வ அமைப்பு ஒன்றின் அறிக்கையின்படி, ஆசியாவிலேயே மிக அதிகமாக கையூட்டு காணப்படும் நாடாக இந்தியா அடையாளம் காணப்பட்டிருக்கிறது. ..உடனே இதுக்கும் காங்கிரஸ் திமுக...ஆட்சியில இல்லைனாலும் காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு வந்தாலும் காங்கிரஸ் திமுக...முடிவா என்ன சொல்லவாறீங்க? காங்கிரஸ் எதுவும் கண்டுபிடிக்கல அதனால நாங்களும் எதையும் கண்டுபிடிக்க மாட்டோம் சரிதானே? காங்கிரஸ் கிணத்தில் விழுந்த நாங்களும் அவங்க வால்புடுச்சுகிட்டே கெணத்துலவிழுவோம் அப்புடியா?...மொத்தத்தில் நாங்க ஆண்ட என்ன காங்கிரஸ் ஆண்ட என்ன? மேட்சுக்கு மேட்சு சரிதானே... ஹெஹெஹெஹெ ஆமா நீங்க காங்கிரசை கேவலப்படுத்துறீங்கன்னு நெனச்சு....ஹஹஹஹஹஹஹஹ்.....ஹஹஹஹஹஹஹ ..வயிறுவலிக்குது...
Rate this:
Cancel
27-ஜன-202113:00:06 IST Report Abuse
சம்பத் குமார் 1). வரலாற்றில் தஞ்சாவூர் பெருங் கோவில் ராஜன் சோழன் காலத்தில் கட்டப்பட்டது என்பதை நாம் அறிவோம்.2). அதேபோல் தாஜ் மஹால் ஷாஜகான் காலத்தில் கட்டப்பட்டது என்பதை நாம் அறிவோம்.3). இதற்காக ராஜராஜன் மற்றும் ஷாஜகான் தங்களது சொந்த கைகால் கட்டப்பட்டது என்று பொருளல்ல.4). உலகில் 50 to 70 சதவீத நாடுகள் நமது தடுப்பூசியை நம்பி உள்ளனர்.5). நாம் நமது அண்டை நாடுகளுக்கு முதலில் கொடுப்பது என்றும் பிறகு மற்ற நாடுகளுக்கு என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.6). இருக்கும் மருந்துகளில் நல்ல பலன் அளிக்க கூடிய மருந்து மற்றும் குறைந்த விலை என்பதால் எல்லா நாடுகளும் நமது மருந்தை நம்பி உள்ளது.7). ஏன் நம்மை இருநூறு ஆண்டுகள் ஆண்ட இங்கிலாந்து முதல் Saudi, UAE போன்ற நாடுகளுக்கும் நம்மிடம் வாங்க உள்ளனர்.8). பாகிஸ்தான் மட்டும் சீனாவை நம்பி பரிசோதனைகளில் ஒத்துழைத்து. ஆனால் தற்சமயம் வரை சீனா மருந்து கொடுக்க காலம் தாழ்த்தி வருகிறது. பாகிஸ்தான் U N ன் இலவச மருந்தையும் நம்பி உள்ளது. பாகிஸ்தான் இந்தியாவிடம் விண்ணப்பித்தால் கண்டிப்பாக மனிதாபிமான அடிப்படையில் திரு மோடி அவர்கள் வழங்குவார்கள்.9). உலகின் மிகப்பெரிய pharmacy producer இந்தியா. உலகின் 50 சதவீத medicine இந்தியாவில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது.10). திரு மோடி அவர்கள் சிறந்த நிர்வாகி, புத்திமான், தொலைநோக்கு பார்வை கொண்டவர், மனிதாபிமானம் கொண்டவர், இறை பக்தி உள்ளவர், அஞ்சா சிங்கம், சாணக்கியர், தேசமே பெரிது என வாழ்பவர். உலகில் 50 to 70 சதவீத மக்கள் வாரத்தில் ஒரு நாள் ஏதாவது ஒருவகையில் அவரை நினைக்காமல் இருக்காமல் இருக்க மாட்டார்கள். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த உலக தலைவர். வேறு எவரும் அவருக்கு நிகர் யாருமில்லை. அதனால்தான் உலகமே இந்தியா என நினைத்து மருந்தினை எல்லா நாடுகளுக்கும் வழங்குகிறார்.11). இந்த மருந்தினை கண்டுபிடித்து எல்லா விஞ்ஞானிகள், மருந்து கம்பனியின் உரிமையாளர், நமது அரசாங்கம் ஆகியோருக்கு நன்றி கூறுவதில் பாரத தாயின் புதல்வர்களாகிய நாம் கடமை பட்டு உள்ளோம். ஜெய் அனுமான்,ஜெய் பாரத். நன்றி ஐயா.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - கழக பாசறை தொண்டன் ,இந்தியா
27-ஜன-202112:35:09 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அப்போ ஏன் எல்லோரும் பயப்படாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளனும் என்று தினம் நீங்கள் ADVERTIMENT கோடி கணக்கில் செலவு செய்து கொடுக்கணும், உனக்கு மட்டும் வாய் என்கிற ஒன்று இல்லை என்றால் எங்கள் பாடு கஷ்டம் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X