டில்லியில் விவசாயிகள் பேரணியில் வெடித்தது வன்முறை

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (18+ 312)
Share
Advertisement
புதுடில்லி :வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள், செங்கோட்டையில் ஏறி, விவசாய சங்க கொடியை ஏற்றினர்.டில்லி, கலவரக்காடாக மாறியதையடுத்து, அங்கு, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு, விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து,
டில்லி, விவசாயிகள் பேரணி, வன்முறை,

புதுடில்லி :வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள், செங்கோட்டையில் ஏறி, விவசாய சங்க கொடியை ஏற்றினர்.

டில்லி, கலவரக்காடாக மாறியதையடுத்து, அங்கு, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறைக்கு, விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், கடந்த, 65 நாட்களாக, டில்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர்.


போராட்டத்துக்கு தீர்வு காண, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு, 11 முறை பேச்சு நடத்தியும், பலன் ஏற்படவில்லை.இதற்கிடையே, போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினமான நேற்று, டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாடு முழுதிலும் இருந்து விவசாயிகள், டில்லியில் குவிந்தனர். குடியரசு தினத்தை சீர்குலைக்க கூடாது என்பது போன்ற நிபந்தனைகளுடன், டில்லி போலீசார் டிராக்டர் பேரணிக்கு அனுமதியளித்தனர். குறிப்பாக, மத்திய டில்லி பகுதிக்குள் வராமல், புறநகர் பாதையில் செல்ல வேண்டும்; பிற்பகல், 12:00 மணிக்கு மேல் தான் பேரணியை துவக்க வேண்டும் என்ற
நிபந்தனைகளை விதித்த போலீசார், டிராக்டர் பேரணிக்கென தனியாக பாதை ஒதுக்கியும் தந்தனர்.

டில்லியில், குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் முடிந்தபின் தான், பேரணியை துவக்குவோம் என, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் உறுதியளித்திருந்தனர்.ஆனால், நேற்று காலை, 9:00 மணிக்கே, சிங்கு எல்லையிலிருந்து, டிராக்டர் பேரணியை விவசாயிகள் துவக்கினர். திக்ரி, காஜிப்பூர், எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்களில், டில்லி நோக்கி விவசாயிகள் வரத் தொடங்கினர். திக்ரி எல்லையில், போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி, விவசாயிகள் சிலர் செல்ல முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால், அதையும் மீறி, டில்லி நகருக்குள் விவசாயிகள் சென்றனர். அதேபோல, முபாரக் சவுக் பகுதியிலும், விவசாயிகள் ஏராளமானோர் கூடினர். அங்கு போலீஸ் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து, போலீஸ் வாகனங்களில் மீது ஏறிச் செல்ல முயன்றனர்.


கூட்டம் கலைப்புஇதைத் தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது, போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே வன்முறை வெடித்தது. போலீசார், கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, கூட்டத்தை கலைத்தனர்.டில்லி அக் ஷர்தாம் கோவில் பகுதி, ஷதாரா பகுதியில் உள்ள சிந்தாமணி சவுக் ஆகிய இடங்களிலும், போலீசாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார், தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.ஆனால், பார்லிமென்ட் அமைந்துள்ள பகுதி அருகே உள்ள ஐ.டி.ஓ., நாங்கோலி சவுக், முபாரக் சவுக் ஆகிய பகுதிகளில், தடுப்புகளை உடைத்து போராட்டக்காரர்கள் நுழைந்தனர். ஐ.டி.ஓ,, போலீஸ் குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மீது, அவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தினர். நிலைமை கட்டுங்கடங்காமல் போனதையடுத்து, டில்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.


செங்கோட்டைஇதற்கிடையே, போராட்டக்காரர்களில் சிலர், செங்கோட்டைக்குள் நுழைந்தனர். செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தி, கோஷங்களையும் எழுப்பினர். மேலும், ஆயுதங்களை சுழற்றி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களில் சிலர் தங்கள் கொடியை, செங்கோட்டையில் ஏற்றினர். சுதந்திர தினத்தன்று பிரதமர் கொடியேற்றும் பகுதியில், விவசாயிகளின் கொடி ஏற்றப்பட்டது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். உடனடியாக, அங்கு துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.

போராட்டம் ஓரளவுக்கு கட்டுபடுத்தப்பட்டாலும், டில்லியில் பல பகுதிகளில் தொடர்ந்த்து பதற்றம் நீடிக்கிறது. இதையடுத்து, டில்லி முழுதும், துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு, 12.00 மணி வரையில், டில்லியில் பல பகுதிகளில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், டில்லியில், இன்று அதிகாலை முதல், பார்லி., கூட்டத்தொடர் முடியும் வரை, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நேற்று மாலை, டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள், டில்லி எல்லைக்கு திரும்ப துவங்கினார். ஆனாலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து டில்லியிலேயே குவிந்துள்ளனர்.


நிபந்தனைகள் மீறல்வன்முறை பற்றி போலீசார் கூறியதாவது:பேரணிக்கு நாங்கள் விதித்த நிபந்தனைகள் ஏற்றுக் கொண்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், அதைக் கடைப்பிடிக்காமல் மீறினர். தடைகளை மீறி, அனுமதிக்கபடாத பாதைகளில் சென்றனர். தடுக்க முயன்ற போலீசாரை தாக்கினர். பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தினர். இந்த வன்முறையில், போலீசார் பலர் காயம் அடைந்தனர். கூட்டத்தை கலைக்க, நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, டில்லியில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில், விவசாயி ஒருவர் இறந்தது தெரிய வந்தது. போலீசார் சுட்டதால், அவர் இறந்ததாக, விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டின. இந்தக் குற்றச்சாட்டை மறுத்த போலீசார், தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து, அவர் இறந்ததாக தெரிவித்தனர். வன்முறையை தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகை, பார்லிமென்ட் வளாகம், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18+ 312)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marai Nayagan - Chennai,இந்தியா
28-ஜன-202113:45:27 IST Report Abuse
Marai Nayagan சாவு அரசியல் செய்யும் திமுக மற்றும் அதன் கூட்டணி பிணம் தின்னிகள் ஏதேனும் சாவு விழாத அரசியல் செய்ய முடியாத என காத்துக்கிடக்கின்றன. மத வியாபாரிகளும் மற்றும் அமைதி மார்க்க () தீவிரவாதிகளும் ஏதேனும் கலவரம் செய்து இந்தியவை உலக அரங்கில் அவமான படுத்தி தங்களுக்கு உதவும் காங்கிரஸ் ஆட்சிக்கு கொண்டு வந்து நாட்டை சூறையாடலாமா என காத்திருக்கின்றனர். அது மட்டும் நடக்காது பாஜக ஆட்சியில் இனி
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-ஜன-202114:46:56 IST Report Abuse
மலரின் மகள் தமிழக விவசாயிகள் போராடினார்கள். பஞ்சாபிய விவசாயிகள் போராடுகிறார்கள். ஒப்புமை பார்த்தால் பலவிஷயங்கள் மறைந்திருக்கின்றன.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
27-ஜன-202114:37:18 IST Report Abuse
Rafi உணவு வழங்கி கொண்டிருக்கின்ற விவசாயிகளின் நிலையோ இன்று பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. அரசு ஜனநாயக போராட்டங்களை கண்டு பயப்படுகின்றது புரிகின்றது, அதனால் தான் பிரச்னைக்குரிய இடங்களில் வலை தள சேவையை, பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்க விடாமல் அவர்களின் சேவையையும், துண்டிக்கின்றது. வாகனத்தில் செல்லும் விவசாயிகளை காவலர்கள் கூட்டம்மாக தாக்குதல் நடத்தும் செயல்களும் மக்களின் பார்வைக்கு வந்து கொண்டிருக்கு. உலக அளவில் மக்களின் ஏகோபித்த ஆதரவை, கவனத்தை விவசாயிகள் பெற இப்பேரணி பிரபல்யம் உதவிதாகி விட்டது.
Rate this:
Anand - chennai,இந்தியா
27-ஜன-202118:26:40 IST Report Abuse
Anandஅந்த போராட்டத்தில் சில முஸ்லிம்களும் இருந்தானுவ, அவர்களுக்கு அங்கு என்ன வேலை?...
Rate this:
sankar - Nellai,இந்தியா
27-ஜன-202120:53:41 IST Report Abuse
sankarஉளறாதே...
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
28-ஜன-202111:48:40 IST Report Abuse
Rafi முஸ்லிம்களில் விவசாயிகள் கிடையாதா? நடப்பது விவசாயிகள் போராட்டம், பிஜேபி கட்சியில் முஸ்லிம்கள் கிடையாதா? எந்த பிரச்னை வந்தாலும் பிரித்தால நினைப்பவர்கள் மத துவேஷத்தையே முன்னிலை படுத்தி குளிர்காய நினைப்பதை சிந்தனையாளர்கள் எப்போதும் உணர்ந்தே இருக்கின்றார்கள். மேலும் இந்த வன்முறைக்கு காரணமானவர், மோடியுடன், அமித்ஷாவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வந்து மக்கள் உண்மையை உணர்ந்துவிட்டார்கள்....
Rate this:
Marai Nayagan - Chennai,இந்தியா
28-ஜன-202112:32:48 IST Report Abuse
Marai Nayaganஉணவு வழங்கும் விவசாயி கத்தியை எடுத்துக்கொண்டு போலீசை குத்த மாட்டான்... பிரிவினை வாதிகள் டெல்லி ஷாஹின் பார்க் (டிரம்ப் இந்தியா வருகை பொது திட்டமிட்ட வன்முறை), மக்கள் அதிகாரம் நக்ஸல் தூத்துக்குடியில் செத்தது, CAA எதீர்ப்பு என வண்ணாரப்பேட்டையில் PFI செய்த வன்முறை நாடகம் என எல்லாம் பார்த்ததுதான். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது உங்கள் கமெண்ட்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X