பொது செய்தி

தமிழ்நாடு

234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 26, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, 234 தொகுதிகளுக்கும், தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழக சட்டசபையின் பதவிக்காலம், மே, 25ல் நிறைவடைகிறது. எனவே, ஏப்ரல் அல்லது மே மாதம் துவக்கத்தில், சட்டசபை தேர்தல் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியாக,
 ட்டசபை தொகுதிகள், தேர்தல் அதிகாரிகள், நியமனம்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, 234 தொகுதிகளுக்கும், தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக சட்டசபையின் பதவிக்காலம், மே, 25ல் நிறைவடைகிறது. எனவே, ஏப்ரல் அல்லது மே மாதம் துவக்கத்தில், சட்டசபை தேர்தல் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியாக, சென்னையில் மாநகராட்சி கமிஷனர், மற்ற மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது, கொரோனா காலம் என்பதால், அந்தத் தொற்று பரவலை தடுக்க, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, கூடுதலாக, 23 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, கூடுதலாக தேர்தல் பணிக்கு, எவ்வளவு ஊழியர்கள் தேவை, பாதுகாப்பு பணிக்கு எவ்வளவு காவலர்கள் தேவை என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, பிரபலங்களை வைத்து குறும்படங்கள் தயாரிக்கும் பணியும், துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சிடும் பணியும் நடந்து வருகின்றன.


இந்நிலையில், மாநிலத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்தல் அதிகாரிகளாக, மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை, உதவி கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.,க்கள், போன்றோரும், சென்னையில், இணை மற்றும் துணை கமிஷனர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், உதவி தேர்தல் அதிகாரிகளாக, தாசில்தார், சிறப்பு தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என, நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் நியமனம் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
27-ஜன-202112:56:31 IST Report Abuse
Srinivas நேர்மையாக உள்ளவர்களை போடுங்க ஆபீசர். சென்ற தேர்தல்களில் நடத்திய கோல்மால் கும்பலை நியமித்து உங்க பெயரை கெடுத்துகாதீங்க ஆபீசர்.
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
27-ஜன-202111:14:39 IST Report Abuse
Elango பண பட்டுவாடா செய்வதை நிறுத்த முடியுமா இவர்களால்...தேர்தல் ஆணையம் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் பேச்சை கேட்டு தான் ஒவ்வரு அடியும் எடுத்து வைக்கிறது இதில் இவர்கள் மட்டும் வந்து என்ன செய்ய போகிறார்கள்....
Rate this:
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
27-ஜன-202103:43:53 IST Report Abuse
கும்புடுறேன் சாமி தேர்தல் அதிகாரிகள், திமுக சார்பில் வேட்புமனு யார் தாக்கல் செய்றாங்களோ அவரே வெற்றிபெற்றவர்ன்னு இப்பவே அறிவிச்சு தேர்தலை விரைவில் முடிச்சுறலாம் , கள நிலவரம் அதைத்தான் சொல்லுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X