அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் வேல் பிடித்தது ஓட்டுக்காக தான்:

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
திருமங்கலம் :''ஓட்டுக்காக ஸ்டாலின் வேல் பிடித்து நாடகம் ஆடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓட்டுக்காக அவர் பச்சோந்தி போல் கலர்கலராக கூட மாறுவார்,''என அமைச்சர் உதயகுமார் பேசினார். மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி கப்பலுார் டோல்கேட்டிலிருந்து குன்னத்துாரில் கட்டப்பட்டு வரும் ஜெ., கோயில் வரை 23 கி.மீ.,
ஸ்டாலின் வேல் பிடித்தது ஓட்டுக்காக தான்:

திருமங்கலம் :''ஓட்டுக்காக ஸ்டாலின் வேல் பிடித்து நாடகம் ஆடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓட்டுக்காக அவர் பச்சோந்தி போல் கலர்கலராக கூட மாறுவார்,''என அமைச்சர் உதயகுமார் பேசினார்.

மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி கப்பலுார் டோல்கேட்டிலிருந்து குன்னத்துாரில் கட்டப்பட்டு வரும் ஜெ., கோயில் வரை 23 கி.மீ., தொடர் ஜோதி ஓட்டத்தை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் விதமாக 100 நாட்களில் மக்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று கூறி வருகிறார். ஸ்டாலினுக்கு ஞாபக மறதி அதிகம். அ.தி.மு.க., ஆட்சி நான்கு நாட்களில் கலைந்து விடும், 4 மாதங்களில் ஆட்சியை பிடித்து விடுவோம் என 4 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். தற்போது தலைமை செயலகம் முதல், தாலுகா அலுவலகங்கள் வரை வாரம்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் உரிய தீர்வு காணப்படுகிறது.ஆனால் ஸ்டாலின் இதையெல்லாம் மறந்துவிட்டார். பொய் பிரசாரங்கள் மூலம் முதலமைச்சர் பழனிச்சாமி செய்த சாதனையை மறைத்து வருகிறார்.அனைத்து பகுதிகளிலும் அம்மா குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.

ஏற்கனவே முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற முகாமில் முதலமைச்சர் பங்கேற்றார். அதில் கூடுதலாக 5 லட்சம் நபர்களுக்கு முதியோர் ஓய்வு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது வழங்கப்படுகிறது.ஸ்டாலின் திடீரென்று வேல் பிடித்துள்ளார். எல்லாம் ஓட்டுக்காக தான். இதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. வேல் பிடித்து பச்சோந்தி போல் நிறம் மாறுகிறார்.இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்டசெயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் ஆர்யா, இளைஞர் அணி செயலாளர் காசிமாயன், மீனவர் அணி செயலாளர் சரவணபாண்டி, மாணவர் அணி செயலாளர் மகேந்திரபாண்டி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
27-ஜன-202118:50:39 IST Report Abuse
Srinivas உளறுவாயன்கள் பேசுவது அவனுங்க கூட்டத்துக்கே பிடிக்காது. சென்ற வாரம் ஒரு மங்குனியின் பேச்சு...எடப்பாடியார் டெல்லி சென்று காவிரி குண்டாறு இணைப்பு திட்ட தொடக்க விழாவை தொடங்கிவைக்க பிரதமர் வாஜ்பாயியை அழைக்க சென்றுள்ளார் என்று....என்ன ஒரு கோமாளித்தனம். நேற்று திண்டுக்கல்லில் ஒரு மங்குனி பேசுது...இது மோசமான ஆட்சி என்று. ஒட்டுமொத்த கோமாளிகள் கூட்டம் இதுதான்....ஆனால் கொள்ளை லஞ்சத்தில் இவனுகளை மிஞ்சமுடியாது.
Rate this:
Cancel
27-ஜன-202117:58:27 IST Report Abuse
R. SUBRAMANIAN தேவைபட்டால் காலையும் பிடிப்பார் எங்கள் தானை தலைவர்.(அப்புறம் காலை வாரிவிடுவார்.அது வேறு விஷயம்)
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
27-ஜன-202117:51:36 IST Report Abuse
sankar ஓட்டுக்காக மார்கழி மாத பஜனையும் செய்வாங்க - இதை நான் சொல்லவில்லை -ஞானி திரு சோ அவர்கள் சொன்னது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X