இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் : ஐ.நா.,| Dinamalar

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் : ஐ.நா.,

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (6)
Share
நியூயார்க் :'கொரோனா வைரஸ் பரவலால், 2020ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ் 9.6 சதவீதமாக இருக்கும். அதே நேரத்தில், 2021ல், 7.3 சதவீத வளர்ச்சியைப் பெறும்' என, ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஐ.நா.,வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறை, உலக பொருளாதார நிலை மற்றும் எதிர்பார்ப்புகள் என்ற பெயரில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்
 இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி  : ஐ.நா.,

நியூயார்க் :'கொரோனா வைரஸ் பரவலால், 2020ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ் 9.6 சதவீதமாக இருக்கும். அதே நேரத்தில், 2021ல், 7.3 சதவீத வளர்ச்சியைப் பெறும்' என, ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா.,வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறை, உலக பொருளாதார நிலை மற்றும் எதிர்பார்ப்புகள் என்ற பெயரில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலக நாடுகள் அனைத்தும், பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளன. கடந்த, 2009ல் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையைவிட மிகவும் மோசமான நிலையை தற்போது சந்திக்க நேர்ந்துள்ளது.


latest tamil news



உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரம், 2020ம் ஆண்டில், 4.3 சதவீதமாக இருக்கும். அது, 2021ல், 4.7 சதவீதமாக உயரும். அதன் மூலம், 2020ல் ஏற்பட்ட இழப்புகளை ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும்.இந்தியாவின் பொருளாதாரம், 2019ல் 4.7 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், 2020ல், அது மைனஸ், 9.6 சதவீதமாக இருக்கும். வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளால், நாட்டு மக்களின் நுகர்வு கடுமையாக குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் பொருளாதாரம், 2021ல், 7.3 சதவீதமாக வளர்ச்சி அடையும்.உலக நாடுகள் மத்தியில், 2021ல் அதிக பொருளாதார வளர்ச்சியை, இந்தியாவில் காணலாம். அதன்பிறகு, சீனாவில், 7.2 சதவீத வளர்ச்சியைக் காணலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X