மும்பை : மஹாராஷ்டிராவில், சிறைகளின் பழமை மற்றும் வரலாற்று சம்பவங்கள் குறித்து மாணவர்கள் அறிவதற்காக, சிறை சுற்றுலா திட்டத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று தொடங்கி வைத்தார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு புனேவில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த எரவாடா சிறை அமைந்துள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில், மஹாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள், இச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
![]()
|
இவர்கள் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள், சிறைகளின் பழமை குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவதற்காக, மஹாராஷ்டிராவில் சிறை சுற்றுலா திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
எரவாடா சிறையில் நடந்த விழாவில், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பங்கேற்ற முதல்வர் உத்தவ் தாக்கரே, சிறை சுற்றுலா திட்டத்தை தொடங்கி
வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE