டில்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: தலைநகர் டில்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தப்படும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நள்ளிரவு முதல் அமலானது.வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள், செங்கோட்டையில் ஏறி, விவசாய சங்க கொடியை ஏற்றினர். வன்முறைக்கு, விவசாயி ஒருவர்
Delhi, sec 144, Farmers Protest, Tractor Rally, டில்லி

புதுடில்லி: தலைநகர் டில்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தப்படும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நள்ளிரவு முதல் அமலானது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள், செங்கோட்டையில் ஏறி, விவசாய சங்க கொடியை ஏற்றினர். வன்முறைக்கு, விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.


latest tamil newsஅமல்:


போராட்டம் ஓரளவுக்கு கட்டுபடுத்தப்பட்டாலும், டில்லியில் பல பகுதிகளில் தொடர்ந்த்து பதற்றம் நீடிக்கிறது. டில்லி, கலவரக்காடாக மாறியதையடுத்து, அங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நள்ளிரவு முதல் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பார்லி., கூட்டத்தொடர் முடியும் வரை, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நேற்று மாலை, டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள், டில்லி எல்லைக்கு திரும்ப துவங்கினார். ஆனாலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து டில்லியிலேயே குவிந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
27-ஜன-202119:19:13 IST Report Abuse
Raj மத்திய அரசின் அராஜக சட்டம் தான் காரணம்
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
27-ஜன-202117:07:46 IST Report Abuse
kalyanasundaram CALL ARMY IF TROUBLE PERSIST AND THAT ONLY COULD BE THE SOLUTION
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
27-ஜன-202116:23:17 IST Report Abuse
Endrum Indian சட்டம் கொண்டு வந்து தீவிரவாதி, இடை தரகர்கள் போராட்டத்தை ஒழித்துக்கட்டவேண்டும். அது ஒன்றே தீர்வு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X