அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: குன்னக்குடிக்கே காவடி எடுத்தாலும்...

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (117)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கே.உமா மகேஸ்வரி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க.,வை, ஹிந்து விரோதக் கட்சி என்று, மாயத் தோற்றத்தை உருவாக்க, பா.ஜ., முயற்சிக்கிறது' என, கண்டனம் செய்திருக்கிறார் ஸ்டாலின்! 'ஹிந்து என்றால் திருடன்' என்று விளக்கம் அளித்தவர், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி.'ஹிந்து
MK Stalin, DMK, Stalin, ஸ்டாலின், திமுக


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


கே.உமா மகேஸ்வரி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க.,வை, ஹிந்து விரோதக் கட்சி என்று, மாயத் தோற்றத்தை உருவாக்க, பா.ஜ., முயற்சிக்கிறது' என, கண்டனம் செய்திருக்கிறார் ஸ்டாலின்! 'ஹிந்து என்றால் திருடன்' என்று விளக்கம் அளித்தவர், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி.'ஹிந்து மதத்தில் இருக்கும் திருமணச் சடங்குகள் ஆபாசமானவை' என, அடித்துச் சொன்னவர், இதே ஸ்டாலின் தான்.

முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போன ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல், கீழே கொட்டி அவமானப்படுத்தினார். காஞ்சிபுரம் கோவிலில் அர்ச்சகர் ஒருவர், தன் நெற்றியில் வைத்த சந்தனத்தையும் விபூதியையும் உடனே அழித்து, தன் ஹிந்து விரோத செயலை பகிரங்கப்படுத்தினார். திருச்சியில் வழங்கப்பட்ட, கும்ப மரியாதையை ஏற்க மறுத்தார், ஸ்டாலினின் மகன் உதயநிதி.

இப்படி கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என, அவரது குடும்பமே, ஹிந்து விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது. தேர்தலுக்காக இப்போது, 'நாங்கள், ஹிந்து விரோதிகள் இல்லை' என்றால், இந்நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் ஹிந்துக்களின் காதுகளில் மலர் சூடி மகிழ நினைக்கிறார். 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என, அண்ணாதுரை சொல்லி இருக்கிறார்' என்கிறார், ஸ்டாலின். 'திருவரங்கத்தில் உறையும் திருவரங்க நாதனை, பீரங்கி கொண்டு பிளக்கும் நாள், எந்நாளோ?' என, ஆசைப்பட்டவர் தானே, அண்ணாதுரை!


latest tamil news'திருப்பதி பெருமாள், கடவுள் என்றால், அந்த கோவில் உண்டியலுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு?' என, எள்ளி நகை ஆடியவர் தானே, கருணாநிதியின் மகள் கனிமொழி.ஸ்டாலின் மனைவி துர்காவின் நெற்றியில் இருந்தால், அது குங்குமம். அதே குங்குமம், தி.மு.க., தொண்டனின் நெற்றியில் இருந்தால், கருணாநிதியின் கண்களுக்கு ரத்தமாக தெரிந்ததே... அது யாருடைய குற்றம்?

'கோவில், கொடியோரின் கூடாரமாக மாறக் கூடாது' என, 'டயலாக்' எழுதிய கருணாநிதியின் ஆட்சியில், கோவில் சிலைகள் கடத்தப்பட்டன. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வேல் ஏந்தி, குன்னக்குடிக்கு எத்தனை முறை காவடி எடுத்தாலும், முதல்வராக முடியாது.

Advertisement
வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
28-ஜன-202117:29:46 IST Report Abuse
ocean .இந்ந மாதிரி விஷயங்களில் என்ன டச் பண்ண ஆள் கிடையாது.
Rate this:
Cancel
Gopalakrishnan Ra - Madurai,இந்தியா
27-ஜன-202121:18:06 IST Report Abuse
Gopalakrishnan Ra இவருக்கு கும்பமாறியதை செய்த பூஜாரியை முதலில் கோவிலைவிட்டு விரட்டணும்.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
27-ஜன-202119:55:57 IST Report Abuse
karutthu இவர்களைச்சொல்லி பிரயோசனமில்லை ......இவ்வளவும் தெரிந்த அர்ச்சகர்கள் ஏன் போய் அவர்களுக்கு மாலை மரியாதையை பூர்ண கும்ப மரியாதையை செய்கிறார்கள் இவர்கள் அவமரியாதை செய்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்கள் கொடுக்கும் நூறு , இருநூறு ரூபாக்களுக்கு ஆசைப்பட்டு செய்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்பது இறைவனுக்கு தான் தெரியும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X