பொது செய்தி

இந்தியா

காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை; தமிழகம் வருவது எப்போது?

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜெ., தோழி சசிகலா, அதிகாரபூர்வமாக இன்று(ஜன.,27) விடுதலையாகிறார். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், எப்போது, 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என்பது தெரியவில்லை.மூச்சுத்திணறல்:சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில்
Sasikala,jail,release,சசிகலா

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜெ., தோழி சசிகலா, அதிகாரபூர்வமாக இன்று(ஜன.,27) விடுதலையாகிறார். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், எப்போது, 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என்பது தெரியவில்லை.


மூச்சுத்திணறல்:


சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், ஜெ., தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், 2017 பிப்., 15ல், அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சசிகலாவுக்கு, கடந்த வாரம், சிறையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

அவருடன், சிறையில், ஒரே அறையில் தங்கியிருந்த இளவரசியும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இருவருக்கும், பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்றும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


மேலும், 'ஆக்சிஜன்' கருவி துணையின்றி, அவர் சீராக சுவாசிக்க துவங்கியுள்ளதாகவும், டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர். இதற்கிடையே, கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி, சசிகலாவின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சிறை அதிகாரிகள், முழு கவச உடை அணிந்து, சசிகலா சிகிச்சை பெறும் வார்டுக்கு, இன்று காலை சென்று, விடுதலை ஆகும் கோப்பில் அவரிடம் கையொப்பம் பெறவுள்ளனர்.

இதன் மூலம், அதிகாரபூர்வமாக அவர் விடுதலை ஆகிறார்.இதன் நகல் ஒன்றை, சிறை அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கி, சசிகலா தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவிப்பர். அவரது போலீஸ் பாதுகாப்பும் திரும்ப பெறப்படும்.


கேள்விக்குறி:


சிறையில் உள்ள அவரது உடைமைகளை பெற்றுகொள்ள, சசிகலா, யாரை பரிந்துரைக்கிறாரோ, அவரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சசிகலா கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவதால், குணமடைந்த பிறகே, அவர் தமிழகம் புறப்படுவார் என, தெரிகிறது. இதற்கிடையே, இளவரசி, பிப்., 5ல் விடுதலையாவார் எனக் கூறப்படுகிறது. சுதாகரன் தரப்பில், நேற்று மாலை வரை, அபராத தொகை செலுத்தவில்லை. இதனால், அவரது விடுதலை கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
27-ஜன-202110:41:44 IST Report Abuse
Rengaraj சசிகலா விடுதலை ஆகிறார் . ஓ.கே. அது அவர் குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியான செய்தி. தமிழக அரசியலே இவர் வருகைக்காக காத்திருப்பதாக அண்ணா தி.மு.க வின் ஒரு சாராரும் எதிர்தரப்பு கட்சியினரும் ஒரே பில்ட் -அப். இப்படி ஒருவர் பற்றி மாறி மாறி தினமும் செய்தி வந்த வண்ணம் இருப்பது வியப்பாகவும் இருக்கிறது. கீழ்காணும் கேள்விகளும் ஒரு சாதாரண குடிமகனுக்கு எழுகிறது. இவர் கண்ணசைவுக்காக ஒன்றரைக்கோடி அண்ணா.தி.மு.க தொண்டர்கள் காத்துகொண்டு இருக்கிறார்களா? அப்படி இருக்கிறார்கள் என்றால் அவர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோரின் ஆளுமையின் கீழ் விசுவாசத்தோடு உழைத்த உண்மையான தொண்டர்களா? அந்த தொண்டர்கள் இவரை அதே ஆளுமை மிக்க தலைவர் என்று ஏற்றுக்கொள்வார்களா? இவர் அந்த அளவுக்கு திறம்பட கட்சியை நடத்தும் வல்லமை பெற்றவரா? இன்றைய அரசியலுக்கு ஏற்றாற்போல் இவர் எதிர்கட்சிகளையோ, ஆளும் மத்திய அரசையோ கேள்வி கேட்கும் திறமை வாய்ந்தவரா? தம் தொண்டர்களை தனது அரசியல் ஞானத்தால் , மேடை பேச்சால் வசீகரிக்கும் திறமை உள்ளவரா ?மீடியா மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் எந்த அளவுக்கு இவர் பேட்டியோ, கேள்விகளுக்கு பதிலோ அளிப்பவர்? இவரை ஏற்றுக்கொள்ளும் அண்ணா.தி.மு.க தொண்டர்கள் இவர் பேரை சொல்லி மக்களிடம் வோட்டு கேட்பார்களா? அப்படி கேட்டால் மக்கள் வோட்டு போடுவார்களா? இதில் எதுவும் இவரிடம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றால் எதற்காக இவரிடம் அண்ணா தி.மு.க தலைவர்களும் பிரமுகர்களும் இவரிடம் சேர வேண்டும்? அந்த ஏதோ ஒரு தனித்துவம் இவரிடம் என்ன இருக்கிறது? பணமா? பாசமா? நட்பா ?நன்றியா? விசுவாசமா? பக்தியுடன் கூடிய சரணாகதியா ?
Rate this:
periasamy - Doha,கத்தார்
27-ஜன-202111:00:59 IST Report Abuse
periasamyஒருவேளை சசிக்கலா ஜெயிலுக்கு செல்லாவிட்டால் இப்போது அவர்தான் தமிழக முதல்வராக இருந்திருப்பார்...
Rate this:
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
27-ஜன-202111:58:15 IST Report Abuse
வல்வில் ஓரிஒருவேளை கட்டுமரம் சின்ன புள்ளையா இருக்குற காலத்திலேயே கொரானா பரவியிருந்தா தமிழ்நாடு இப்போ சிங்கப்பூரை விட நல்லேந்திருக்கும்.....
Rate this:
Cancel
27-ஜன-202110:08:40 IST Report Abuse
ஆரூர் ரங் கஞ்சப் பிசுனாறி ஜி குடும்பம் மருமகனுக்கு அபராதம் கட்டுவது வீண் என நினைத்தது நியாயம்தான். பத்து கோடிக்கு ஒர்த் இல்லை👎 போலிருக்கு. அதைவிட எக்ஸ்ட்ரா ஆறுமாசம் ( 2 ஆம்) மாமியார் வீடே சீப் அண்ட் பெஸ்ட்
Rate this:
Cancel
27-ஜன-202110:05:30 IST Report Abuse
ஆரூர் ரங் கருணாநிதி தலைமையில் அவரோட🙌 ஆசியில் திருமணம் செய்து கொண்டவர் என்பதால் சுடல 😎நேரில் போய் வரவேற்கணும். ஆட்டயப் போட்டதில் வாங்கின கட்டிங்குக்காவது நன்றி வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X