எது பாலியல் அத்துமீறல்; கோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
மும்பை : சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அளித்துள்ள தீர்ப்புக்கு, குழந்தைகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.சிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை சமீபத்தில் ஒரு தீர்ப்பு அளித்தது.'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல்,
Nagpur HC, sexual assault, minor

மும்பை : சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அளித்துள்ள தீர்ப்புக்கு, குழந்தைகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல் தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை சமீபத்தில் ஒரு தீர்ப்பு அளித்தது.'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்புச் சட்டத்தை மேற்கோள்காட்டி, இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, குழந்தைகள் நல அமைப்பான, ஐ.பி.பி.எப்., எனப்படும் சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் அமைப்பின் தெற்காசிய பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


latest tamil newsஇது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தோலுடன் தோல் தொடர்பு இல்லாதது பாலியல் அத்துமீறலாகாது என்பதை ஏற்க முடியாது. இது ஒப்புதல் தொடர்பானது. இது போன்ற சம்பவங்களில், வயதில் மூத்தவரான ஒரு ஆண், தன்னைவிட வலு குறைந்த சிறுமியிடம் நடத்தும் அத்துமீறலாகும்.

தனது வலுவை காட்டும் வகையிலேயே, இதுபோன்ற செய்கையில் ஈடுபடுகின்றனர். அதை ஒரு குழந்தையால் எப்படி தடுக்க முடியும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக, இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இதை உயர்நிலை நீதிமன்றம் ரத்து செய்யும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், மஹாராஷ்டிர அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. நாக்பூர் கிளையின் தீர்ப்பை எதிர்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeyakumar Jeyakumar - Madurai,இந்தியா
27-ஜன-202120:06:46 IST Report Abuse
Jeyakumar Jeyakumar அவன் செய்யுறத மட்டும் தப்பு இல்லேன்னு சொல்றான்பு ...
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
27-ஜன-202119:17:00 IST Report Abuse
Raj நாக்பூர் கிளை-பேரே பயங்கரம்
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
27-ஜன-202115:43:05 IST Report Abuse
Dr. Suriya நம்ப பகுத்தறிவு மாதிரி பெண்களுக்கு கற்பு என்பது ஆண் ஆதிக்கவாதிகள் சொல்லப்பட்டது கற்பு என்று அப்படி ஒன்றும் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X