அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., வகுத்த பிரசார வியூக அஸ்திரத்தை எடுத்தது அதிமுக

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
கோவை: கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த, ஜெ., வகுத்த பிரசார வியூக தேர்தல் பணிகளை, அ.தி.மு.க., இப்போதே துவக்கி விட்டது.தமிழகத்தில், 2006 முதல், 2011 வரை, தி.மு.க., ஆட்சி செய்தது. 2011 சட்டசபை தேர்தல் பணிகள் நடந்தபோது, மீண்டும் தி.மு.க.,வே ஆட்சிக்கு வரும் என்கிற பேச்சு, பரவலாக இருந்தது.அதை முறியடிக்கும் வகையில், 2011, ஏப்., 6ல் அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள்
Jayalalithaa,ADMK,TN election,அதிமுக,ஜெயலலிதா

கோவை: கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த, ஜெ., வகுத்த பிரசார வியூக தேர்தல் பணிகளை, அ.தி.மு.க., இப்போதே துவக்கி விட்டது.

தமிழகத்தில், 2006 முதல், 2011 வரை, தி.மு.க., ஆட்சி செய்தது. 2011 சட்டசபை தேர்தல் பணிகள் நடந்தபோது, மீண்டும் தி.மு.க.,வே ஆட்சிக்கு வரும் என்கிற பேச்சு, பரவலாக இருந்தது.அதை முறியடிக்கும் வகையில், 2011, ஏப்., 6ல் அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., தலைமையில், கோவை வ.உ.சி., மைதானத்தில், மிக பிரமாண்டமாக, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டது.

ஜெ.,வை வரவேற்க, விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை, லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். எந்த திசைபார்த்தாலும் மனித தலையாக இருந்தது; மைதானம் நிரம்பி வழிந்தது; யாருமே இத்தகைய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை; தமிழகமே கோவையை திரும்பிப் பார்த்தது.


latest tamil news


தி.மு.க., ஆட்சிக்காலத்தில், மக்களையும் தொழில்துறையினரையும் கடுமையாக பாதித்த மின்வெட்டு மற்றும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு சம்பவங்களை நினைவூட்டி, பிரசாரம் செய்தார். இது, மக்கள் மன்றத்தில் நன்றாகவே எடுபட்டது. அ.தி.மு.க., வென்று, ஆட்சியை கைப்பற்றியது. அத்தகைய வியூகத்தை, வரும் சட்டசபை தேர்தலுக்கு மீண்டும் அ.தி.மு.க., கையில் எடுத்துள்ளது.

'தி.மு.க.,வினர் ஆட்சிக்கு வந்தால், அராஜகம் செய்வர்; கட்டப்பஞ்சாயத்து செய்வர்; தொழில்நிறுவனத்தினரை மிரட்டுவர்; ஏமாந்து விடாதீர்கள்' என்ற ரீதியில், ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும், முதல்வர் பழனிசாமி பேசினார். இது, கோவை தொழில்துறையினரை சிந்திக்க வைத்துள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு பின், முதல்வர் மீண்டும் தொகுதி, மாவட்டம் வாரியாக தேர்தல் பிரசாரத்துக்கு முடிவு செய்துள்ளார். இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது, ஜெ., கூட்டத்துக்கு திரட்டியதுபோல், பிரமாண்டத்தை ஏற்படுத்தி, தமிழக மக்கள் எப்போதும் எங்கள் பக்கம் என்பதை நிரூபிக்க, ஆளுங்கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
27-ஜன-202123:47:21 IST Report Abuse
S.Ganesan முதல்வர் கூறியது முற்றிலும் உண்மை. திமுக ஆட்சிக்கு வருமா என்ற சந்தேகம் இருக்கும் போதே உதயநிதி காவல் அதிகாரியை மிரட்ட தொடங்கியது ஊரறிந்த நிகழ்வு
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
27-ஜன-202120:40:09 IST Report Abuse
Visu Iyer @தமிழவேல் - /// இதை பஞ்சாமிருதம் என்று சொல்லப்பிடாது.. அது அமிர்தம்.. இது அதுக்கு ஒத்து வராது....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜன-202120:14:37 IST Report Abuse
Bhaskaran விவசாயிகளின் சிரமம் தெரிந்த முதல்வர் பழனிசாமி .பந்தா இல்லாமல் இருக்கிறார் எளிமையானவர் போலி நாத்திகவாதியல்ல முருக பக்தர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X