சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் சுட்டுக்கொலை

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
மயிலாடுதுறை: சீர்காழியில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மூவரை பிடித்த போலீசார், அதில் ஒருவனை என்கவுன்ட்டரால் சுட்டுக்கொன்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி, 50. இவர் தர்ம குளத்தில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று (ஜன.,27) காலை தன்ராஜ் சவுத்ரி
Encounter, Dead, Theft, சீர்காழி, என்கவுன்ட்டர், கொலை, கொள்ளை,

மயிலாடுதுறை: சீர்காழியில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மூவரை பிடித்த போலீசார், அதில் ஒருவனை என்கவுன்ட்டரால் சுட்டுக்கொன்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி, 50. இவர் தர்ம குளத்தில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று (ஜன.,27) காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48) மகன் அகில் (25) மருமகள் நிகில் (24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். காலை 6:30 மணிக்கு தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர். அதனைக் கேட்டு தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார்.


தப்ப முயன்ற ஒரு கொள்ளையன் சுட்டுக்கொலை

latest tamil news



அவரைத் தாக்கிய மர்ம கும்பல், வீட்டிற்குள் புகுந்து ஆஷா அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த நிகிலையும் அவர்கள் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள், சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க், சிடி, ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சவுத்ரியின் காரில் தப்பிச் சென்றனர்.


latest tamil news


இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த தன்ராஜ் சவுதரி, அவரது மருமகள் நிகில் இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற தன்ராஜ் சவுத்ரியின் கார் சீர்காழி அருகே உள்ள பட்ட விலாகம் பகுதியில் போலீசார் கண்டுபிடித்தனர்.


latest tamil news


இச்சம்பவம் தொடர்பாக சீர்காழி அருகே உள்ள எருக்கூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மணீஷ், மணிபால், ரமேஷ் ஆகிய மூன்று வடநாட்டு இளைஞர்களை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொள்ளை, கொலை செயலில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரில் மணிபால் என்பவனை கொள்ளையடிக்கப்பட்ட நகையை பதுக்கி வைத்த இடத்தை அடையாளம் காண்பதற்காக மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரை அழைத்து சென்றார். அப்போது டிஎஸ்பி.,யை தள்ளிவிட்டு தப்பியோட முயற்சித்த கொள்ளையனை போலீசார் என்கவுன்ட்டர் செய்து சுட்டுக்கொன்றனர்.


நான்காவது கொள்ளையனும் சிக்கினான்


நகை கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் மூன்று பேரை கைது செய்தனர் அதில் ஒருவன் என்கவுன்டரில் சுட்டுக்கொள்ளப்பட்டான். இந்நிலையில் நான்காவதாக மற்றொரு கொள்ளளையனை போலீசார் கைது செய்ததுள்ளனர்.



Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr M Chandrasekhara Warrier - Kollam,இந்தியா
27-ஜன-202122:35:02 IST Report Abuse
Dr M Chandrasekhara Warrier தமிழகத்தில் குற்றங்களைச் செய்யும் அனைத்து வட இந்திய குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்பட வேண்டும். மேலும், காவல்துறையினரால் நாள் முழுவதும் ரோந்து செல்வது வட இந்திய காட்டுமிராண்டிகளின் குற்றங்களைத் தடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Thanu Srinivasan - Chennei,இந்தியா
27-ஜன-202121:10:49 IST Report Abuse
Thanu Srinivasan இந்த மூவரும்தான் இக்கொடியவர்கள் செய்தார்கள் என்று உறுதியாக தெரியும் பட்சத்தில் அம்மூவரையுமே சுட்டு கொன்றிருக்கவேண்டும் தப்பே இல்லை. நீதி மன்றம் மரண தண்டனையை வழங்குமா என்பதே சந்தேகம். அப்படியே விஜாரணை (Trial court)மரண தண்டனையை வழங்கினாலும் உயர் தீர்ப்பு மன்றம் /உச்ச தீர்ப்பு மன்றம் அரிதிலு அரிதான கொலை அல்ல என்று ஆயுள் தண்டனையாக குறைத்துவிடும். எத்தனையோ கொடூரமான கொலைகளை அரிதிலும் அரிதான கொலை அல்ல என்று மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த அவலம் பல உள்ளன. எனவே என்கவுண்டர்கள் தப்பபல்ல
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
27-ஜன-202120:30:14 IST Report Abuse
தமிழ்வேள் எப்படி கிலோ கணக்கில் தங்கம் ஆக்கப்படுகிறது ? நேர்மையாக சம்பாதித்தார்களா ? அடுத்தவனை ஏமாற்றி வஞ்சித்து சேர்த்த சொத்து இப்படித்தான் அழியும் ..
Rate this:
Nathan - Manama,பஹ்ரைன்
28-ஜன-202107:34:19 IST Report Abuse
Nathanஅவர்கள் முறையாக அனுமதி பெற்று கடன் தொழில் செய்ப்பவர்கள். கிலோ கணக்கில் உள்ள தங்க நகைகள் எல்லாம் பொது மக்கள் அடகு வைத்தவைகளாக இருக்கும், யாரையும் ஏமாற்றவில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X