பொது செய்தி

இந்தியா

தே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றாரா?

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
புதுடில்லி: தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்தது. அப்போது, மேலும் குழந்தைகள் பலியாகாமல் சொந்த செலவில் ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல
FarmersProtest, NSA, KafeelKhan, Delhi, Bindu, Sabarimala

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்தது. அப்போது, மேலும் குழந்தைகள் பலியாகாமல் சொந்த செலவில் ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல உயிர்களை காப்பாற்றியதாக கூறப்படுபவர் டாக்டர் கபீல் கான். அப்போது அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், 9 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.


latest tamil news


பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, கபீல் கான் மீது எந்த தவறும் இல்லை என்று அறிக்கை அளித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 10ல் அலிகார் முஸ்லிம் பல்கலை.,யில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் கபீல் கான் கலந்து கொண்டு பேசினார். இதில், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட அவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கபீல்கானை தடுப்புக்காவலில் வைத்திருப்பது சட்டவிரோதம் என கூறியதுடன், அவரது பேச்சில் அலிகார் நகரத்தின் அமைதியை எங்கும் அச்சுறுத்தவில்லை என குறிப்பிட்டு விடுதலை செய்ய உத்தரவிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக தானும், டிராக்டரில் ஆதரவு தெரிவிப்பதாக கபீல் கான் தெரிவித்தார்.


latest tamil newsஇது தொடர்பாக அவரது யூடியூப் தளத்தில் வீடியோ வெளியிட்ட கபீல் கான், விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தருவதாக கூறி டிராக்டர் ஓட்டி சென்றார். பேரணியில் டிராக்டருடன் அவர் பங்கேற்றாரா என தெளிவாக தெரியவில்லை. எனினும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருந்த அவர் விவசாயிகள் பேரணியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்றதாக மற்றுமொரு சர்ச்சைக்குரிய பெண் படமும் இணையத்தில் பரவிவருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் செயற்பாட்டாளர் பிந்து அம்மினியும் டிராக்டர் பேரணியில் பங்கேற்றதாக தெரிகிறது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர், எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் செயற்பாட்டாளர் என பலரும் தாங்கள் விவசாயிகள் எனக்கூறிக்கொண்டு பேரணியில் கலந்துக்கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரி ,இந்தியா
28-ஜன-202110:41:09 IST Report Abuse
Nisha Rathi இந்தியாவை கேவலப்படுத்தவேண்டும் என்ற காரணத்தில் தான் இந்த தேசவிரோதக்கும்பல் தேசவிரோத கட்சிகளுடன் சேர்ந்து நடதியா கலவரம் தான் இது விவசாயிகள் இந்த அளவிற்கு கேவலமாக இருப்பார்கள் என்று இந்தியா மக்கள் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
28-ஜன-202108:30:56 IST Report Abuse
Cheran Perumal போராட்டங்களில் பங்கேற்பதையே முழு நேர தொழிலாக வைத்திருப்பவர்கள். பிழைப்பதற்கு அவர்கள் கண்டுபிடித்திருக்கும் வழி. என்ன, நம்ம உ பி ஸ்களுக்கு இருநூறு ரூபாய் என்றால் இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-ஜன-202102:29:47 IST Report Abuse
தமிழவேல் அது யாராக ( டாக்டர், நடிகை,அரசியல்வாதி, கமிஷன் மண்டி ஏஜென்ட் ,..........) இருந்தால் என்ன, அவர்களும் இந்தியர்கள் தானே ? அவர்கள் யாருக்கும் ஆதரவு தர உரிமை இல்லையா ? அவர்கள், விவசாயிகள் என்று கூறி க்கொண்டதாக (செய்தியில்) எதற்கு வீன் பழி சுமத்த வேண்டும் ?
Rate this:
Lakshmipathi S - Bangalore,இந்தியா
28-ஜன-202107:23:13 IST Report Abuse
Lakshmipathi Sகொஞ்சம் யோசித்து கருத்து பகிரவும்...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
28-ஜன-202107:32:36 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANநம்ம கூட, பொறகு காங்கிரஸ் கூட இருந்த குஸ்பு அம்மணி தாமரைக் கச்சிக்கு போனப்ப நமக்கு எரிச்சலா இருந்துச்சுல்ல? அம்மணி லேட்டஸ்டாக சங்கிகளின் கச்சிக்கு மாறும்போது நாம நெஞ்சுல அடிச்சுக்கிட்டு கதறல ?...
Rate this:
Nisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரி ,இந்தியா
28-ஜன-202110:46:24 IST Report Abuse
Nisha Rathiதமிழ்வேள் நீ இந்தியன் தானே எனக்கு சந்தேகமாக இருக்கு...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஜன-202102:08:34 IST Report Abuse
தமிழவேல் ஜாதகம் வேணும்னாலும் அனுப்பி வைக்கிறேன், நீ என்று ஒருமையில் எழுதுவதை தவிர்க்கவும்....
Rate this:
Nisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரி ,இந்தியா
29-ஜன-202115:10:15 IST Report Abuse
Nisha Rathiஇந்தியாவை நம் தேசத்தை முதலில் மதித்து நட பிறகு உனக்கு மரியாதையை தானா வரும் தேசத்துரோகிகளுக்கு என்ன மரியாதையை வேண்டிகெடக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X