பொது செய்தி

இந்தியா

சென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான வீரர்கள் ஏலம், பிப்.,18ல் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் 'கொரோனா' காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடக்கவுள்ள 14வது ஐ.பி.எல்., சீசன் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான வீரர்கள் ஏலம்
IPL2021, Auction, Chennai, ஐபிஎல், ஏலம், சென்னை

புதுடில்லி: 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான வீரர்கள் ஏலம், பிப்.,18ல் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் 'கொரோனா' காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடக்கவுள்ள 14வது ஐ.பி.எல்., சீசன் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இது, வரும் பிப்.,18ல் நடத்தப்படும் என்று பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


latest tamil news
இந்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில், 8 அணிகள் சார்பில் தக்கவைத்துக் கொண்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. வரும் பிப். 4ம் தேதிக்குள் வீரர்களை 'டிரேடு' முறையில் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் வீரர்களுக்கான 'மினி' ஏலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம், வரும் பிப்.,18ம் தேதி சென்னையில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
27-ஜன-202121:43:53 IST Report Abuse
Siva நாங்க எல்லாம் இலவச அரிசி சாப்பிட்டு டிவி மேட்ச் பாக்றோம். நீங்க கோடியில் ஃபிக்ஸ் பண்றீங்க. தேச துரோகிகள்..
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
27-ஜன-202117:35:53 IST Report Abuse
vnatarajan ஐபிஎல் ஒரு விளையாட்டாக தெரியவில்லை. ஏலம் விடுவதில் மூலம் கிரிக்கட்டை ஒரு வர்த்தக பொருளாக மாற்றிவிட்டார்கள் பேசாமல் பிபிசியை ஒரு கம்பெனியாகவும் விளையாடும் வீரர்களை ஸ்டாக் மார்க்கெட் மூலம் ஏலம் விட்டு விடலாமே.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
27-ஜன-202115:16:21 IST Report Abuse
srinivasan Arabian traders sold people as slaves I'm auction. This continues. In different forms in worst games. These players all put together can cnot get one medal in Olympia
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X