புதுடில்லி : 2021ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என ஐஎம்எப் எனப்படும் சர்வதேச பன்னாட்டு நிதியகம் கணித்துள்ளது. இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
உலகளாவிய தொற்றாகி போன கொரோனா பிரச்னையால் உலக பொருளாதாரம் கடந்தாண்டு கடும் சரிவை சந்தித்தது. இன்னும் அந்த நோய்யின் தொற்று முழுமையாக தீரவில்லை என்றாலும் மெல்ல குறைந்து வருகிறது. மேலும் பொருளாதாரமும் மெல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் மற்ற நாடுகளை காட்டிலும் ஓரளவுக்கு பரவாயில்லை என்ற நிலையில் உள்ளது. இதனிடையே 2021ல் இந்தியாவின் வளர்ச்சி, சீனாவை விட அதிகமாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சி, 7.3 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், சீனாவின் வளர்ச்சி, 7.2 சதவீதமாக இருக்கும் எனஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச பன்னாட்டு நிதியகம் 2021ல் உலக நாடுகளின் வளர்ச்சியை கணித்து பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் வளர்ச்சி, உலகின் மற்ற நாடுகளை விட சிறப்பாக 11.5 சதவீதம் என்ற அளவில் இரட்டை இலக்கத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளது. இது இந்திய தொழில் துறையினர் இடையே ஒரு புது நம்பிக்கையை விதைத்துள்ளது. இதன்காரணமாக இந்த விஷயம் டுவிட்டரில் "Indiain2021" என்ற ஹேஷ்டாக்கில் டிரெண்ட் ஆனது.
''நல்ல செய்தி. 2021ல் இரட்டை இலக்க வளர்ச்சியை பெறும் உலகின் ஒரே பெரிய பொருளாதார நாடு இந்தியா திகழும் என ஐஎம்எப் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது''. ''கொரோனா காலக்கட்டத்தில் கூட இந்தியாவின் வளர்ச்சி இவ்வளவு வரும் என கணித்து இருப்பது பெருமையான விஷயம். முதலீட்டாளர்களுக்கும், தொழில் துறையினருக்கும் மேலும் ஒரு நம்பிக்கையை இந்த விஷயம் அளிக்கும்''. ''நிச்சயம் இந்திய பொருளாதாரம் அசுர வளர்ச்சி பெரும், அதில் சந்தேகமே இல்லை'' என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE