'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோசை போட்டுக்கொண்டார்.உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக்கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியும் பணியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் வெற்றிக்கண்டனர்.
KamalaHarris, SecondDose, CovidVaccine, US, VicePresident, கமலா ஹாரிஸ், இரண்டாவது டோஸ், கொரோனா, தடுப்பூசி, துணை அதிபர், அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோசை போட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக்கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியும் பணியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் வெற்றிக்கண்டனர். இதில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வந்தது, அந்நாட்டு மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. அமெரிக்க அதிபரான ஜோ பைடன், தான் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என உறுதியளித்தார்.


latest tamil news


அந்தவகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த டிசம்பர் 21ம் தேதி, மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார். துணை அதிபரான கமலா ஹாரிஸ், டிச.,29ல் வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில், மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக் கொண்டார். கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார். இந்நிகழ்வு டிவியில் நேரலையாக ஒளிபரப்பானது. இந்நிலையில், கமலா ஹாரிஸ் நேற்று தனது இரண்டாம் டோஸ் கொரொனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'அனைவரும் அவரவர் முறை வரும் போது தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதுவே உங்கள் உயிரைக் காக்கும்,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
28-ஜன-202110:29:42 IST Report Abuse
pattikkaattaan நம்ம நாட்டுல ஒருத்தர் திரைக்கு பின்னால ஒளிஞ்சி நின்னு பாக்குறாரு ...
Rate this:
Cancel
Raju - jersi,யூ.எஸ்.ஏ
27-ஜன-202119:36:23 IST Report Abuse
Raju நான் -பிபிஸிர்( -Pfizer) இரண்டாம் ஊசி போட்டுக்கொண்டேன். பக்க விளைவுகள் இல்லை .
Rate this:
Cancel
Naduvar - Toronto,கனடா
27-ஜன-202117:35:58 IST Report Abuse
Naduvar அடங்குக...அந்தம்மா பிராமின் இல்ல விட்டுடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X