பொது செய்தி

இந்தியா

டில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் வாபஸ்

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் இரு விவசாய சங்கங்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில், 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன. மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், குடியரசு தினமான நேற்று (ஜன.,26) டில்லியில்
FarmersProtest, Withdrawing, Protest, FarmLaws, Delhi, VM Singh, விவசாயிகள், போராட்டம், வாபஸ், விவசாய சங்கங்கள், விஎம் சிங், வேளாண் சட்டங்கள்

புதுடில்லி: டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் இரு விவசாய சங்கங்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில், 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன. மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், குடியரசு தினமான நேற்று (ஜன.,26) டில்லியில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். இதில், போலீசார் அனுமதிக்காத பகுதிகளிலும் சில விவசாயிகள் பேரணியை நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தகர்த்து பேரணியை தொடர்ந்தனர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.


latest tamil news


விவசாயிகள், போலீசாருக்கு இடையே நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக டில்லி போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கம் மற்றும் பாரதிய கிசான் யூனியன் ஆகிய விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.


latest tamil news


இது தொடர்பாக ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கத்தின் தலைவரான வி.எம்.சிங் கூறியதாவது: நான் உட்பட, ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கம் இந்த போராட்டத்திலிருந்து இப்போதே விலகிக் கொள்கிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் எதிர்ப்பு தொடரும். மக்களை தியாகம் செய்யவோ அல்லது அடிக்கவோ நாங்கள் இங்கு வரவில்லை. வன்முறை போராட்டங்கள் எங்களுக்கு ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


இதனைத்தொடர்ந்து, பாரதிய கிசான் யூனியனும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் தாகூர் பானு பிரதாப் சிங் கூறுகையில், '58 நாட்கள் நடந்த போராட்டம் நேற்று நடந்த வன்முறையால் முடிவுக்கு வந்தது வேதனையளிக்கிறது,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
28-ஜன-202115:11:20 IST Report Abuse
pradeesh parthasarathy இந்த இரு விவசாய சங்கங்களும் ஆளும் அரசின் சொல் கேட்டு நேரமே இந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதற்கு மற்ற இயக்கங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக மற்ற இயக்கங்கள் நேரமே குற்றம் சாட்டினர். இந்த இரண்டு ஓயக்கங்களையும் போராட்டத்திற்கு நுழைய செய்ததே ஆளும் அரசு .
Rate this:
Cancel
Uthiran - chennai,இந்தியா
28-ஜன-202112:27:37 IST Report Abuse
Uthiran இந்த ரெண்டு க்ரூப் மட்டுமில்ல.. மத்தவனுங்களும் தல தெறிக்க ஓடிருவானுங்க.. அத்தனை கமிஷன் கடை கார தலைவங்களுக்கும் டெல்லி போலீஸ் சார்பாக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாகவும் அவனுங்களோட பாஸ்போர்ட்டை முடக்கப்போவதாகவும் செய்திகள் வருகின்றன. அவனுகளை ஆடவிட்டு அவனுங்களோட வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி, இவனுங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் தரைமட்டமாக்கியத்தில் மத்திய அரசுக்கு இது மிகப்பெரிய வெற்றியே.. இவனுங்களுக்கு முட்டுக்கொடுத்து மூர்க்கன் மைந்தன் போன்றவர்களுக்குத்தான் வருத்தமாக இருக்கும்.
Rate this:
Cancel
R.Kalyanaraman - Chennai,இந்தியா
28-ஜன-202111:53:34 IST Report Abuse
R.Kalyanaraman காங்கிரஸ் பார்ட்டி லீடர்ஸ், கம்யூனிஸ்ட் பார்ட்டி லீடர்ஸ். ஏ ஏ பீ பார்ட்டி மற்றும் சிலரை திஹார் ஜெயிலில் தள்ளுங்கள். அயோக்கியர்கள் மோடியை பிடிக்காததால் செய்யும் வேலை தான் இந்த கலவரம். டெல்லியில் போராட்டம் செய்பவர்கள் விவசாய ஏஜெண்டுகள். விவசாயிகள் இல்லை. இந்த சட்டம் ஜூன் மாதமே வந்துவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X