கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் நாளை (ஜன.,28) திறக்க தடையில்லை எனவும், அது தொடர்பான வழக்கு முடியும்வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி கிடையாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடமை யாக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை
Jayalalitha, VedhaHouse, ChennaiHC, சென்னை, ஐகோர்ட், உயர்நீதிமன்றம், வேதா இல்லம், ஜெயலலிதா,நினைவில்லம், திறப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் நாளை (ஜன.,28) திறக்க தடையில்லை எனவும், அது தொடர்பான வழக்கு முடியும்வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி கிடையாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடமை யாக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை நீதிமன்றம் அறிவித்த பிறகும் அவரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதாகவும் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.


latest tamil news



இதனிடையே, ஜெயலலிதாவின் இல்லத்திற்கான டெபாசிட் தொகையை செலுத்தியதால் அவரது இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாக விளக்கம் அளித்த தமிழக அரசு, மக்கள் பார்வைக்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நாளை (ஜன.,28) திறக்கவிருப்பதாக அறிவித்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை வேதா இல்லம் திறக்கப்பட இருப்பதால் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. மேலும், வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தி இருப்பதாகவும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தை நாளை திறந்து வைக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு முடியும்வரை பொதுமக்களை நினைவு இல்லத்துக்குள் அனுமதிக்க கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
27-ஜன-202123:17:54 IST Report Abuse
Anantharaman Srinivasan வீட்டில் சமைக்கலாம் ஆனால் சாப்பிட அனுமதியில்லை.
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
27-ஜன-202121:24:37 IST Report Abuse
அறவோன் கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் போன்றவற்றையும் மக்கள் பார்த்து உவகை கொள்ள நினைவிடமாக்கவேண்டும் 😂
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
27-ஜன-202120:45:01 IST Report Abuse
Visu Iyer திறக்கலாம் ஆனால் அனுமதி இல்லை.. இதன் பொருள் என்ன...?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜன-202123:28:42 IST Report Abuse
தமிழவேல் அனுமதி இல்லாட்டியும் தொறந்து விட்டுடுவானுவோ.... அதனால, மாணத்தைக் காப்பாத்திக்கவேண்டி செய்திருக்கலாம். கோர்ட்டில் உள்ளபோதே, பார்லியில் அனுமதியும் கேட்காமல் கல்லு நடல ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X