அமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் நியமனம்

Updated : ஜன 27, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் என்பவரை அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். அமெரிக்காவின்46 -வது புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த 20ம் தேதி பதவியேற்றார். அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதாகும் ஜேனட் எல்லன் என்பவரை நியமனம் செய்தார். இவரது நியமனத்திற்கு அமெரிக்காவின் நாடாளுமன்ற செனட் சபையின் ஒப்புதல்பெற

வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் என்பவரை அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.



latest tamil news



அமெரிக்காவின்46 -வது புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த 20ம் தேதி பதவியேற்றார். அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதாகும் ஜேனட் எல்லன் என்பவரை நியமனம் செய்தார். இவரது நியமனத்திற்கு அமெரிக்காவின் நாடாளுமன்ற செனட் சபையின் ஒப்புதல்பெற வேண்டும். சென்ட் சபையில் தற்போது ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் சரிசமமான உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சபைியன் தலைவராக இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வாக்குஅளிப்பார் என்பதால் செனட்சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வரும் தீர்மான மசோதா என எதுவாயினும் எளிதாக நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.

மேலும் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் என்பவரை நியமிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கியது.இதனையடுத்து அமெரிக்க வரலாற்றில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் புரவுன் மற்றும் யேழ் பல்கலைகழகங்களில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். அதுமட்டுமல்லாது உலகின் பல்வேறு புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.

அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவில் 1994-97 வரையிலும் , சான்பிரான்சிஸ்கோ மத்திய ரிசர்வ் வங்கியில் 2004- முதல் 2010 வரையிலும் மீண்டும் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக 2014 முதல் 2018 வரையிலும் பணியாற்றி உள்ளார்.


latest tamil news



இவரது நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள செனட் சபை உறுப்பினர்கள் அமெரிக்க பொருளாதாரம் மேலும் சிறப்பாக அமைவதற்கு ஜேனட் எல்லனின் வழிகாட்டுதல்கள் மற்றும் நிதிக்கொள்கைகள் மீதுதங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalai Arashan - Quito,ஈக்வடார்
28-ஜன-202110:10:10 IST Report Abuse
Kalai Arashan ஜேனட் எல்லன் ரொம்ப நல்ல நிர்வாகி வரவேற்கவேண்டும் அமெரிக்கா🥰 அமெரிக்காவின் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் தகுதிவாய்ந்தவர் என்பதில் சந்தேகம் வேண்டாம்,
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-ஜன-202123:29:41 IST Report Abuse
வெகுளி நிதியமைச்சரா இருந்துட்டு பின் திகாரில் இளைப்பாறும் பழக்கம் அமெரிக்காவுல உண்டா?....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-ஜன-202121:11:20 IST Report Abuse
Ramesh Sargam நாட்டின் புதிய அதிபர் பைடன் அவர்களுக்கும் 74 வயது. அவர் நியமித்திருக்கும் நிதி அமைச்சருக்கும் 74 வயது. பைடன் அவர்களுக்கு இந்த நம்பர் ரொம்ப பிடிக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X