புதுடில்லி:
டில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையை
அடுத்து டுவிட்டர் நிறுவனம் 500 கணக்குகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.
![]()
|
டில்லியில் குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் ஒரு பகுதியினர் டில்லி செங்கோட்டை நோக்கி பயணித்தனர். இதனையடுத்து விவசாய அமைப்புகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. மோதிலில் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர். வன்முறை காரணமாக டில்லி போர்களம் போல் காட்சியளித்தது.
![]()
|
இதனிடையே மைக்ரோ பிளாக்கிங் வெப்சைட்டின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: டில்லியில் குடியரசு தினத்தின் போது நிகழ்ந்த சம்பவத்தை அடுத்து டுவிட்டர் விதிமுறைகளை மீறியதாக 500க்கும் மேற்பட்ட கணக்குள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement