புதுடில்லி :நம் விமானப் படைக்கு வாங்கப்பட்டுள்ள, 'ரபேல்' போர் விமானங்களில், மூன்றாம் கட்டமாக, மேலும், மூன்று விமானங்கள், ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து புறப்பட்டுள்ளன.
நம் விமானப்படைக்கு, 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க, 59 ஆயிரம் கோடி ரூபாயில், 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.முதல் கட்டமாக, ஐந்து போர் விமானங்கள், கடந்தாண்டு, ஜூலை, 29ல் வந்து சேர்ந்தன. இரண்டாவது கட்டமாக, மூன்று விமானங்கள், நவ., 3ல் வந்தன.
தற்போது மூன்றாவது கட்டத்தில், மூன்று போர் விமானங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த விமானங்கள், பிரான்சில் இருந்து நேற்று புறப்பட்டுள்ளன.
![]()
|
இந்த விமானத்துக்கு தேவையான எரிபொருளை நடுவானில் நிரப்புவதற்காக, மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் எரிபொருள் அடங்கிய விமானம் உடன் வருகின்றது.இதையும் சேர்த்து இதுவரை, 11 விமானங்கள், நம் விமானப் படைக்கு கிடைத்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE