எல்லைப் பிரச்னை: உத்தவ் ஆவேசம்

Updated : ஜன 29, 2021 | Added : ஜன 27, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மும்பை:''மஹாராஷ்டிரா - கர்நாடகா எல்லையில், மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கர்நாடக பகுதிகளை, யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்,'' என, மஹாராஷ்டிரா முதல்வர், உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மஹாராஷ்டிரா - கர்நாடகா எல்லையில் கர்நாடகாவுக்கு
எல்லைப் பிரச்னை, உத்தவ், ஆவேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா,

மும்பை:''மஹாராஷ்டிரா - கர்நாடகா எல்லையில், மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கர்நாடக பகுதிகளை, யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்,'' என, மஹாராஷ்டிரா முதல்வர், உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மஹாராஷ்டிரா - கர்நாடகா எல்லையில் கர்நாடகாவுக்கு சொந்தமான பகுதிகளில் மராத்தி மொழி பேசுவோர் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த மாவட்டங்களை, மஹாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையிலான இந்த எல்லைப் பிரச்னை தொடர்பாக எழுதப்பட்ட புத்தகத்தை, மஹாராஷ்டிரா முதல்வர், உத்தவ் தாக்கரே, வெளியிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மஹாராஷ்டிரா - கர்நாடகா எல்லையில், கர்நாடகா சொந்தம் கொண்டாடும், பெல்காம், கார்வார், நிப்பானி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வசிக்கும் மராத்தி மக்கள் மீது, கர்நாடகா அரசு அடக்குமுறைகளை ஏவிவிடுகிறது.இந்த மாவட்டங்களை மஹாராஷ்டிராவுடன் இணைப்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, பெல்காம் மாவட்டத்தின் பெயரை, கர்நாடகா அரசு மாற்றியது.அதை இரண்டாவது தலைநகராக அறிவித்து, அங்கு சட்டசபை கட்டடம் கட்டி, அதில் ஒரு கூட்டத் தொடரையும் நடத்திஉள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகாதா?இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை, கர்நாடகாவில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை, யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
28-ஜன-202117:05:14 IST Report Abuse
a natanasabapathy அப்படி பார்த்தால் தாராவி தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டில் 40 சதவிகிதம் ஆந்திராவுக்கு கொடுக்கவேண்டும் தமிழ்நாட்டில் 40 சதவிகிதம் தெலுங்கர்கள் உள்ளனர்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-ஜன-202116:59:05 IST Report Abuse
sankaseshan மகாராஷ்டிரா கர்நாடக எல்லை பிரச்னையை தீர்க்க மகாஜன் கமிஷன் போடப்பட்டது இரு மாநிலங்களும் தீர்ப்புக்கு கட்டு படுவதாக கூறின , அதன்படி பெலகாமும் சில மராட்டி பேசும் கிராமங்களும் கர்நாடகாவுக்கு போனது பெரும்பாலான மராட்டி பேசும் பகுதிகள் கர்நாடகாவிலிருந்து மகாராஷ்டிரா வுக்கு போனது எல்லை போடும்போது இந்த நிகழ்வுகள் சகஜம்தான் தமிழ்நாடு கேரளா வில்லும் இது மாதிரி நடந்தது போட்ட ஒப்பந்தத்தை மீறுவது சரியா ? உதவாக்கரை பெயருக்கு போல நடக்கிறான்
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
28-ஜன-202116:14:33 IST Report Abuse
Ram உத்தவ் மாதிரியான பொறுக்கிகள் ஆட்சிக்கு வந்தால் மக்களை பிரிப்பதைத்தான் செவ்வனே செய்வார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X