அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: 'கத்தரிக்கா' கொள்கை!

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (133)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :சுபஸ்ரீ, பழங்காநத்தம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாற்றம் வேண்டும்; இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை' என, ரசிகர்களை உசுப்பேத்திய நடிகர் ரஜினி, கடைசியில் தன் உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் வேண்டாம் என, விலகி விட்டார்.இதையடுத்து, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

சுபஸ்ரீ, பழங்காநத்தம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாற்றம் வேண்டும்; இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை' என, ரசிகர்களை உசுப்பேத்திய நடிகர் ரஜினி, கடைசியில் தன் உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் வேண்டாம் என, விலகி விட்டார்.இதையடுத்து, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர், தி.மு.க.,விலும், சிலர், பா.ஜ.,விலும் ஐக்கியமாகினர்.இதைக் கேள்விப்பட்ட ரஜினியும், ரசிகர் மன்ற பதவியை ராஜினாமா செய்த பின், விருப்பப்பட்ட கட்சியில் சேரலாம் என, தன் ரசிகர்களுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டார்.



latest tamil news




தமிழகத்தில் ஊழலில் ஊறிப்போன திராவிடக் கட்சிகளை விரட்டியடித்து, மாற்றத்தை ஏற்படுத்த தான், அவரது ரசிகர்கள், 'அரசியலுக்கு வா தலைவா' என, போராடினர் என்பது, கடந்த கால வரலாறு.அந்த ரசிகர்கள் சிலர் இன்று, தி.மு.க., வில் இணைந்துள்ளது வேடிக்கையானது. ரஜினி ரசிகர்கள், அவரின் தலைமையில் நல்லதொரு ஆட்சி மலர வேண்டும் என, விரும்புகின்றனர் என்று தானே, மக்கள் நினைத்தனர். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பதற்காக, ஊழல்வாதிகளுடன் கைக்கோர்த்திருப்பது, அவர்களின் முகமூடியைக் கிழித்துள்ளது. உண்மையிலேயே ரஜினி ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும்... ரஜினி விரும்பிய, ஆன்மிக அரசியல் கோட்பாடுடன் உள்ள கட்சியுடன் அல்லவா, கைக்கோர்த்திருக்க வேண்டும்?


latest tamil news



ஹிந்து விரோத கட்சியான, தி.மு.க.,வில் அவர்கள் இணைந்திருப்பது, நகைப்புக்குரியது. இவர்கள், ரஜினி மன்றத்தில் இருந்தது எல்லாம், அவர் கட்சி துவக்கி, ஆட்சி பிடித்தால், தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என, எதிர்ப்பார்த்திருந்தனர்; அதனால் தான், அவர் இல்லை என்றாலும், மந்தி போல, தாவி விட்டனர். 'ரஜினிக்காக உயிரைத் தருவேன்' என, மார் தட்டும் கூட்டம், அவருக்கு சற்றும் உடன்பாடு இல்லாத, தி.மு.க.,வில் இணைந்தது, தன் மனசாட்சிக்கு செய்யும் துரோகம் அல்லவா? இப்போது புரியுதா... இது தான் அரசியல். கொள்கையாவது கத்தரிக்காயாவது!


Advertisement




வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
31-ஜன-202121:02:40 IST Report Abuse
Venkataramanan Thiru ரஜினி அரசியலுக்கு வரததே ரசிகர்களின் ஸ்வதந்திர அரசியல்கண்ணோத்தை தான் மற்றவிரும்பவில்லை என்பதே
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
29-ஜன-202102:13:20 IST Report Abuse
தல புராணம் பாஜக சங்கி பரிவார் ரஜினியை ஏகவசனத்தில் கழுவி ஊத்த ஆரம்பிச்சு சில வாரங்கள் ஆயிடிச்சி. என்ன கடுப்போ, கண்ணியமோ, இந்த கஷ்டத்திலேயும் ரஜினி பாஜகவுக்கு ஆதரவு கொடுங்கன்னு சொல்லல்லை. சங்கி பரிவார் செம காண்டுல காந்தல் தாங்காம கதர்றாங்க, பாவம்
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
29-ஜன-202100:52:09 IST Report Abuse
Ram 100 கோடி சம்பளம் ... ஆனா ரசிகர் அரசியலுக்கு இவர் கூட கட்சியில் சேர்ந்து சம்பாதிக்க கூடாது .. பணத்தாசை இருந்த வராதீங்க.. அப்படி சொல்லறார் ... நம்ம தமிழ் மக்கள் ..."வெளுத்தெல்லாம் பால் இன்னு நெனத்திகிட்டு இருகாங்க ... கெடச்ச ஜென்மத்தை நல்ல பயன்படுத்திங்ங்க Please emotiona Kattu paduthunga...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X