தமிழக நிகழ்வுகள்
1. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 44 ஆண்டு சிறை
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி வினோத்,34. இவர், 12ம் வகுப்பு படித்து வந்த, 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்வதாக கூறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். 'போக்சோ' வழக்கில் இளைஞருக்கு, 44 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

2. தாய், மகனை கொன்று 17 கிலோ நகை கொள்ளை
மயிலாடுதுறை : சீர்காழியில், அதிகாலையில் வீடு புகுந்து தாய், மகனை கழுத்தை அறுத்து கொலை செய்து, 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில கொள்ளையர்களை, போலீசார் மூன்று மணி நேரத்தில் சுற்றி வளைத்தனர். போலீசாரை தாக்கி, தப்ப முயன்ற கொள்ளையன் ஒருவரை, 'என்கவுன்டரில்' சுட்டு கொன்றனர்.
3. பதுக்கி விற்க முயன்ற 600 கிலோ குட்கா பறிமுதல்
கோவை : கோவையில், 5 லட்சம் மதிப்பிலான சுமார் 600 கிலோ குட்காவை பதுக்கி விற்க முயன்ற, வாலிபர் கைது செய்யப்பட்டார்.

4. பெண்களின் உள்ளாடையை கிழித்த 'சைக்கோ' நபர் கைது
செட்டிப்பாளையம் : பெண்களின் உள்ளாடைகளை கிழித்த நபரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒக்கிலிபாளையம் பகுதியில் தங்கி, கட்டட வேலைக்கு சென்று வந்த செல்வராஜ் என்பவர், திருமணமாகாத விரக்தியில், பெண்களின் உள்ளாடையை கிழிப்பதை, வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றவியல் சட்டத்தின் கீழ், அவரை கைது செய்தனர்.
5. மது பாட்டில் பதுக்கி விற்ற 73 பேர் கைது
கோவை, : குடியரசு தினத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, 73 பேர் கைது செய்யப்பட்டனர்.

6. சொத்துக்காக தந்தையை வெட்டிய மகன் கைது
மதுக்கரை : மதுக்கரையை அடுத்த வழுக்குப்பாறை பகுதியை சேர்ந்த குமாரசாமி, (65) விவசாயி. இவரது மகன் கதிர்வேல், 29; மது குடிக்கும் பழக்கமுடையவர். இவர் தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கதிர்வேல் அரிவாளை எடுத்து தந்தையின் தலையில் வெட்டி விட்டு தப்பினார். வழக்கு பதிவு செய்த மதுக்கரை போலீசார், தப்பியோடிய கதிர்வேலை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.

இந்தியாவில் குற்றம் :
செய்தியாளர்கள் மீது வழக்கு
கான்பூர்: உத்திர பிரதேசத்தின் கான்பூரில், பள்ளி மாணவர்கள் சிலர் யோகா பயிற்சி மேற்கொண்ட காட்சிகளை உள்ளூர் 'டிவி' ஒன்று ஒளிபரப்பியது. அதில், இந்த கடுங் குளிர்காலத்தில், மாணவர்களை 'ஸ்வெட்டரை' கூட அணியவிடாமல், கல்வித்துறையினர் சித்திரவதை செய்ததாக குறிப்பிட்டது. இதை மறுத்த கல்வித்துறையினர், தவறான தகவல்களை வெளியிட்டதாக அளித்த புகாரின் பேரில், டிவி செய்தியாளர்கள் மோஹித், அமித் மற்றும் யாசின் ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உலக நடப்பு
இந்திய வம்சாவளி சிறுவன் கைது
சிங்கப்பூர்: தென்கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் வசிக்கும் கிறிஸ்தவரான, 16 வயது இந்திய வம்சாவளி சிறுவன், அங்குள்ள இரு மசூதிகளுக்கு வரும் முஸ்லிம்கள் மீது, மார்ச் மாதம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தான். நியூசிலாந்தில், 2019ம் ஆண்டு மார்ச்சில், இரு மசூதிகள் தாக்கப்பட்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டதன் வருடாந்திர நாளில், இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த சிறுவன், அதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டு வந்தான். இந்நிலையில், சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளதாக, சர்வதேச பாதுகாப்பு அமைப்பினர் நேற்று கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE