'தாண்டவ்' வலைத் தொடர் சர்ச்சை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி:'தாண்டவ் வலைத் தொடர் சர்ச்சை தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு தடையில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அமெரிக்காவைச் சேர்ந்த, 'அமேசான் பிரைம்' தளம், திரைப்படங்கள் மற்றும், 'வெப் சீரிஸ்' எனப்படும் வலைத் தொடர்களை, வாங்கியும், சொந்தமாக

புதுடில்லி:'தாண்டவ் வலைத் தொடர் சர்ச்சை தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு தடையில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.latest tamil newsஅமெரிக்காவைச் சேர்ந்த, 'அமேசான் பிரைம்' தளம், திரைப்படங்கள் மற்றும், 'வெப் சீரிஸ்' எனப்படும் வலைத் தொடர்களை, வாங்கியும், சொந்தமாக தயாரித்தும், வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில், தாண்டவ் என்ற, ஹிந்தி வலைத் தொடரை, சமீபத்தில் தயாரித்து வெளியிட்டது. 'பாலிவுட்' நடிகர், சயீப் அலி கான், நடிகை டிம்பள் கபாடியா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இதில், பல காட்சிகள் மற்றும் வசனங்களில், ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டு உள்ளதாக, பல்வேறு மாநிலங்களிலும், ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வலைத் தொடர் தயாரிப்பு தரப்பில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர்களை கைது செய்வதில் இருந்து, ஏழு நாட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், கோரப்பட்டது.


latest tamil newsஇந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா, சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க, நீதிபதிகள் அனுமதி அளித்தனர். 'கைது நடவடிக்கையில் இருந்து, விலக்கு அளிக்க முடியாது' என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக, உயர் நீதிமன்றங்களை நாடுமாறு உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
28-ஜன-202117:23:52 IST Report Abuse
Endrum Indian ஒரு மண்ணும் அதிரடி இல்லே. சட்டு புட்டுன்னு தீர்ப்பு வருமா ???வரவே வராது ? பேட்டி வாங்கிக்கொண்டாள் தீர்ப்பு உடனே வரும் ???
Rate this:
Cancel
Vinoth - Hyderabad,இந்தியா
28-ஜன-202112:36:48 IST Report Abuse
Vinoth பெரும்பாலான திரைப்படங்களில் இந்துமதத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை வேண்டுமேன்றே சொருகிவிடுகின்றனர். முட்டாள் இந்துக்களும் அதைப்பார்த்து ரசித்து விசிலடிக்கின்றனர். இந்து அல்லாத நம்பிக்கைகளை மட்டம்தட்டி காட்சிகள் அமைத்தால் அப்புறம் நடக்கிற கதையே வேறே. இந்துக்கள் இளிச்சவாயர்களாக இருக்கிறவரை இது தொடரும். இந்து மதத்தை இழிவுபடுத்தினால் அது மதசார்பின்மை என்ற கண்ணோட்டம் திருத்தப்படவேண்டும்
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
28-ஜன-202111:47:04 IST Report Abuse
Rajalakshmi காலங்காலமாக இந்திய திரைப்படங்கள் ஹிந்துக்களை நையாண்டி செய்தேதான் பணம் ஈட்டி வந்தன. ''சினிமாவை சினிமாவா பாருங்க '' என நீட்டி முழக்கி pontificate செய்யும் கூத்தாடிகள் பலர். கிரிக்கெட் ஆடும் கோஹ்லியின் மனைவி பாலிவுட் கூத்தாடியும் ஹிந்துக்களை மிகவும் இழிவுபடுத்தி படமெடுத்து வெளியிட்டு ஜாலியாக ஒரு உதவாக்கரை பிண்டத்தையும் பெற்று போட்டிருக்கிறது. கிரிக்கெட் பித்து பிடித்த ஹிந்துக்கள் ''பரவால்லே பரவால்லே'' என தன்மானமின்றி சகித்துக்கொள்வார்கள்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜன-202119:35:50 IST Report Abuse
madhavan rajanகமல் ஒரு படத்தில் முஸ்லீம்களை அதுபோல காட்டியதற்கு அவர்கள் சினிமாவை சினிமாவா பாத்தாங்களா? அதுலயும் மதச்சார்பற்ற நிலையில் போலித்தனம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X