பொது செய்தி

இந்தியா

சபரிமலை வருமானம் ரூ. 248 கோடி சரிவு பக்தர்களிடம் உதவி கோர திட்டம்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
கம்பம்:சபரிமலை அய்யப்பன் கோவிலில், கடந்தாண்டு, 269 கோடி ரூபாயாக இருந்த வருமானம், இந்தாண்டு, 92 சதவீதம் சரிந்து, 21 கோடி ரூபாயாக குறைந்தது. இதையடுத்து, 'இழப்பை சரிக்கட்ட வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும், வங்கிகளில் கடன் வாங்கவும் பரிசீலித்து வருகிறோம்' என, தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மகரவிளக்கு, மண்டல

கம்பம்:சபரிமலை அய்யப்பன் கோவிலில், கடந்தாண்டு, 269 கோடி ரூபாயாக இருந்த வருமானம், இந்தாண்டு, 92 சதவீதம் சரிந்து, 21 கோடி ரூபாயாக குறைந்தது. இதையடுத்து, 'இழப்பை சரிக்கட்ட வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும், வங்கிகளில் கடன் வாங்கவும் பரிசீலித்து வருகிறோம்' என, தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.



latest tamil news



சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மகரவிளக்கு, மண்டல பூஜைகள், நவம்பர் முதல், ஜனவரி இரண்டாவது வாரம் வரை நடக்கும். கடந்தாண்டு மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையின் வருமானம் 269.17 கோடி ரூபாயாக இருந்தது.


latest tamil news



இந்தாண்டு, கொரோனாவால், பக்தர்கள் குறைவாகவே அனுமதிக்கப்பட்டனர். எனவே வருவாய் கடுமையாக சரிந்தது. வெறும், 21.17 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது. சபரிமலை தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள, 1248 கோவில்கள், சபரிமலை வருவாயை வைத்து தான் நிர்வாகம் செய்யப்படுகிறது.மாத சம்பளம் மற்றும் இதர கோவில்கள் பராமரிப்பிற்காக மட்டும், 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.


latest tamil news



ஏற்கெனவே, கேரள அரசு, சபரிமலை கோவிலுக்கு, 70 கோடி ரூபாயை வழங்கியது. தற்போது கடும் நிதிநெருக்கடியில் இருப்பதால், கூடுதல் நிதி வழங்குமாறு, மாநில அரசை தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், 'வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும் கோவிலுக்கு, பக்தர்கள் வழங்கிய உபய பொருட்களை வங்கிகளில் வைத்து கடன் பெறவும் ஆலோசித்து வருகிறோம்' என, தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
30-ஜன-202113:51:21 IST Report Abuse
sankaseshan அய்யப்பனை சீண்டினாரு பின்னராயி இப்போ கெஞ்சறாரு .தெய்வம் நின்றுகொல்லும். கொரானா மோடி அய்யாவின் முயற்சியாலும் மருத்துவ நிறுவனங்களும் கட்டுப்பட்டு இருக்கின்றன ஐயப்பன் இவங்க மூலமாக வேலையே காட்டியிருக்கிறார் புரிஞ்சுதா தலபுராணம் ?
Rate this:
Cancel
Subramanian G Subramaniyan G - kanchipuram,இந்தியா
29-ஜன-202109:37:25 IST Report Abuse
Subramanian G Subramaniyan G இதனை இப்போ தெரியுதா ஐயப்பன் யாரு உங்கள் முதலமைச்சர் விஜயன் கிட்ட கேளுங்கள் பதவி இருக்குன்னு தைரியத்தில் ஐயப்பன் கிட்ட விளையாடிவிட்டார் பாதிப்பு ஐயப்பனுக்குஇல்லை கேரள மக்களுக்கு தான் உலகம் ரன்அகலான கேரளாவை யாரும் காப்பாத்த முடியாதது
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
28-ஜன-202122:20:31 IST Report Abuse
தல புராணம் ஐயப்பனுக்கு சக்தி இருந்தால் கொரொனாவை “சம்ஹாரம்” செய்து பக்தர்களை காத்து உண்டியல் வருமானத்தை 250 கோடி அதிகரிக்க வெச்சிருக்கலாமே? ஏன் முடியல?? மனுசன் கண்டுபிடிச்ச கடவள்களுக்கு அம்புட்டு தான். அந்த பவரில் ஜீரோ வாட்ஸ் பல்பு கூட எரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X