சத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
தன்டேவடா:சத்தீஸ்கரின் தன்டேவடா மாவட்டத்தில், 12 பெண் நக்சல்கள் உட்பட, 24 நக்சல்கள், நேற்று முன்தினம் போலீசார் முன் சரண் அடைந்தனர்.சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில நக்சலைட்டுகளை, பயங்கரவாதத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள் என, மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, ஏராளமானோர் ஏற்கனவே சரண் அடைந்து உள்ளனர்.

தன்டேவடா:சத்தீஸ்கரின் தன்டேவடா மாவட்டத்தில், 12 பெண் நக்சல்கள் உட்பட, 24 நக்சல்கள், நேற்று முன்தினம் போலீசார் முன் சரண் அடைந்தனர்.



latest tamil news



சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில நக்சலைட்டுகளை, பயங்கரவாதத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள் என, மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, ஏராளமானோர் ஏற்கனவே சரண் அடைந்து உள்ளனர். இந்நிலையில், தன்டேவடா மாவட்டத்தின் பஸ்தார் பகுதியில், 12 பெண் நக்சல்கள் உட்பட, 24 நக்சல்கள் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.


latest tamil news



குடியரசு தினத்தை முன்னிட்டு, போலீசார் முன்னிலையில் சரண் அடைந்துள்ள இவர்களில் மூவரின் தலைகளுக்கு, தலா 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. சரண் அடைந்த, 24 பேருக்கும் அரசு தரப்பில், தலா, 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.


latest tamil news



அரசின் கொள்கைப்படி, அவர்களின் வளர்ச்சிக்கு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் கூறினர்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajalakshmi - Kuwait City,குவைத்
28-ஜன-202111:35:09 IST Report Abuse
Rajalakshmi நல்ல கூத்து :-(( அன்றாட வாழ்வில் தார்மிகமாக நடந்து கொள்ளும் பாரத தேச பிரஜைகளுக்கு ஒரு சீராட்டலும் கிடையாது வன்முறையில் இறங்கி பலரை கொன்று குவிக்கும் வெறியர்கள் ''சரண்டர்'' என சொன்னவுடன் ராஜோபசாரம், பல இலவசங்கள், இலவச வேலை வாய்ப்பு உட்பட...ஊடகங்களும் இந்த தீவிரவாதிகளை பெரிய தர்மசீலர்கள் போல போற்றி புகழும். உரிய தண்டனையை வழங்காமல் இப்படி அரவணைப்பது வன்முறையை ஊக்குவிக்கும். எத்தனை போலீசார் மடிந்தனர்? கை கால்களை இழந்தனர்? அவர்களுக்கு உதவி செய்தால் நல்லது. இந்த அநியாயத்தை நியாயப்படுத்த ''the devil citing the ures to suit its purpose'' என்பதற்கேற்ப நமது புராணங்களையும் இதிகாசங்களையும் மேற்கோள் காட்டவும் தயங்காத அரசியல்வாதிகள்.
Rate this:
Cancel
JäíšhañkAř Iyer - Bhilai,இந்தியா
28-ஜன-202109:59:05 IST Report Abuse
JäíšhañkAř Iyer ச்சட்டிஸ்கர் மாநிலத்தின் முதல்வரின் பெயர் BHOOPESH BAGHEL ஆகும். அதாவது பூபேஷ் பஹேல்
Rate this:
Cancel
28-ஜன-202109:56:37 IST Report Abuse
ஆரூர் ரங் அங்கு மாவொயிஸ்ட்👹 ஆதரவில்தான் காங் வென்றது. இரு தீவீரவாத😡 இயக்கங்களுக்கும் நல்ல அன்டர்ஸ்டான்டிங் உண்டு. சரண் என்பதெல்லாம் நாடகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X