சத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண்| Dinamalar

சத்தீஸ்கரில் 12 பெண்கள் உட்பட 24 நக்சல்கள் சரண்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (5)
Share
தன்டேவடா:சத்தீஸ்கரின் தன்டேவடா மாவட்டத்தில், 12 பெண் நக்சல்கள் உட்பட, 24 நக்சல்கள், நேற்று முன்தினம் போலீசார் முன் சரண் அடைந்தனர்.சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில நக்சலைட்டுகளை, பயங்கரவாதத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள் என, மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, ஏராளமானோர் ஏற்கனவே சரண் அடைந்து உள்ளனர்.

தன்டேவடா:சத்தீஸ்கரின் தன்டேவடா மாவட்டத்தில், 12 பெண் நக்சல்கள் உட்பட, 24 நக்சல்கள், நேற்று முன்தினம் போலீசார் முன் சரண் அடைந்தனர்.



latest tamil news



சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில நக்சலைட்டுகளை, பயங்கரவாதத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள் என, மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி, ஏராளமானோர் ஏற்கனவே சரண் அடைந்து உள்ளனர். இந்நிலையில், தன்டேவடா மாவட்டத்தின் பஸ்தார் பகுதியில், 12 பெண் நக்சல்கள் உட்பட, 24 நக்சல்கள் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.


latest tamil news



குடியரசு தினத்தை முன்னிட்டு, போலீசார் முன்னிலையில் சரண் அடைந்துள்ள இவர்களில் மூவரின் தலைகளுக்கு, தலா 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. சரண் அடைந்த, 24 பேருக்கும் அரசு தரப்பில், தலா, 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.


latest tamil news



அரசின் கொள்கைப்படி, அவர்களின் வளர்ச்சிக்கு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் கூறினர்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X