அரசியல் செய்தி

தமிழ்நாடு

டில்லி கலவரம் திட்டமிட்ட சதி: முருகன் புகார்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
பழநி : ''டில்லியில் -விவசாயிகள் போராட்டத்தில் நடந்த கலவரம், திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறினார்.திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, நேர்த்திக்கடன் செலுத்த, பா.ஜ., தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் ஏராளமான தொண்டர்கள் காவடி எடுத்து வந்தனர்.பா.ஜ.,
BJP, Murugan, Farmers Protest

பழநி : ''டில்லியில் -விவசாயிகள் போராட்டத்தில் நடந்த கலவரம், திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, நேர்த்திக்கடன் செலுத்த, பா.ஜ., தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் ஏராளமான தொண்டர்கள் காவடி எடுத்து வந்தனர்.


latest tamil news


பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறியதாவது: கந்தசஷ்டியை இழிவு படுத்தியவர்களுக்கு வேல் யாத்திரை நடத்தி, தகுந்த பாடம் புகட்டினோம். ஹிந்து மதத்தை அவமதித்தவர்கள், விபூதியை கீழே கொட்டியவர்கள், தற்போது, ஹிந்து மதத்தை பாதுகாப்போம் என்கின்றனர்.

வேல் யாத்திரையை விமர்சித்த ஸ்டாலினை, அதே இடத்தில், தை மாத கிருத்திகை நாளில், பழநி முருகன் வேலை எடுக்க வைத்தார். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக, ஸ்டாலின் செய்திருந்தாலும், அவருக்கு முருகன் நல்ல ஆயுளை தரவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-202118:13:29 IST Report Abuse
J.V. Iyer புரோக்கர்கள், இடைத்தரகர்கள், சீக்கியர்கள், பஞ்சாபிகள் உண்மையான முகம் இந்த கலவரத்தால் தெரிந்துவிட்டது. ..
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
28-ஜன-202115:40:11 IST Report Abuse
Gopinathan S கடவுளை வைத்து அரசியல் நாடகம் போடும் கூட்டம் தமிழ் நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது... முதல் புகைப்படம் அதைத்தான் சொல்கிறது....இன்னொரு நண்பர் சொன்னது போல ராஜா ..வானதி...கணேசன்...போன்றோர்கள் இங்கே மிஸ் ஆனது "நூல்"இழையில் தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை...ஏன் அவர்கள் ராமருக்கு வில்லை சுமந்து விசுவாசத்தை காட்ட கூடாது?
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜன-202115:23:16 IST Report Abuse
Abdul Aleem ஆம் பிஜேபி யுடைய திட்டம் இட்ட சாதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X