பொது செய்தி

தமிழ்நாடு

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
வடலுார்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 150வது தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 7:30 மணியளவில், தருமசாலை மற்றும் ஞானசபையில் சன்மார்க்க கொடி

வடலுார்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.latest tamil newsகடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 150வது தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 7:30 மணியளவில், தருமசாலை மற்றும் ஞானசபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், 10:30 மணியளவில் கொடியேற்றப்பட்டது.


latest tamil newsஇன்று தைப்பூச தினத்தையொட்டி, காலை, 6:00 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10:00, மதியம், 1:00, இரவு, 7:00, 10:00 மற்றும் 29ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கும், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

இன்று, தருமசாலை பிரசங்க மேடையில், சன்மார்க்க சொற்பொழிவு, திருஅருட்பா பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில், ஊரன் அடிகளார் உள்ளிட்டோர் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர். மாலை, 6:00 மணியளவில், மகாமந்திரம் ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கொரோனா தொற்று காரணமாக, அரசின் வழிகாட்டுதலோடு விழா நடக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
28-ஜன-202117:32:13 IST Report Abuse
THINAKAREN KARAMANI புல்பூண்டு மற்றும் ஓரறிவு உயிரினம் முதல் ஆறு அறிவு உயிரினம் வரை அனைத்து உயிரினங்களிடமும் நாம் அன்பு காட்ட வேண்டுமென்று சொன்ன வள்ளலார் பெருமானை வணங்கி மகிழ்வோம்.
Rate this:
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
28-ஜன-202116:30:49 IST Report Abuse
Naagarazan Ramaswamy இந்த ஆண்டில் மெய்ஞ்ஞானம் வெல்லும். விஞ்ஞானம் பின்தங்கும். சித்தர் ஆட்சியாக மாறும். அரசியல் கொள்ளை செய்வோர் மாற்றப்படுவார். தைவ நம்பிக்கையுடன் வளருங்காலம் நெருங்குது, வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜன-202116:10:45 IST Report Abuse
 oce ஐந்தொழில் ஆதி செய் ஐவராதிகள் காண்பதற்கு அரும் பெரும் சக்திகளால் எங்கே இருக்கிறார்கள் இந்த சக்திகள் எல்லா அண்ட வெளிகளிலும் சஞ்சரிக்கிறார்கள.வெளி நாட்டினர் இவர்களை ஏலியன்கள் எனறழைக்கின்றனர்.( திருவருட்பா அகவல் 863 மற்றும் 1025 ) இவர்கள் மனிதர் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் நாசா விஞ்ஞானிகள் இவர்களை சில கருவிகளால் புகைப்படம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை இந்து மத கடவுளர்கள் தேவர்கள் என இந்து மதத்தில் கூறுகின்றனர். இவர்கள் அடிக்கடி பூமிக்கும் வந்து போகிறார்கள். செவ்வாய் கிரகத்தில் ஐந்து நிலைகள் கொண்ட கோபுரம் இருப்பதை நாசா புகைப்படம் காட்டுகிறது.இதைத் தான் ஐந் தொழில் ஆதி செய் ஐவராதிகளை ஐவரும் காண்டற்கு அரும் பெரும் சக்திகளாக விளங்குவதாக வள்ளலார் அகவலில் கூறுகிறார்.ஏலியன்கள் வெந்ததை தின்று விட்டு நம் போல் நடமாடுப வர்கள் இல்லை. அவர்கள் கார்பன் உருவ அமைப்பு கொண்டவர்கள்.அவர்கள் உணவு ஹைட்ரஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு என செல்வினோ என்ற அமெரிக்க விஞ்ஞானி கூறுகிறார்.தேவரை எல்லாம் திகழ் புற அமுதளித்து ஆவகை காத்தருள் அருட்பெருஞ்சோதி (அகவல் 749) அகப்புற அமுதளித்து ஐவராதிகளை அகப்படக் காத்தருள் அருட்பெருஞ்சோதி (அகவல் 751 ) ஏலியன்கள் பேச்சு மொழி மிக பழமையானதாக தமிழ் மொழிக்கு இசைந்து இருக்கிறது என அலெக்ஸ் கெல்லர் என்ற மொழியாராய்ச்சி அமெரிக்க வல்லுநர் குறிப்பிடுகிறார்.ஏலியன்கள் மின்காந்த அலைகளையும் ஒளிக்கதிர்களையும் சூரியன் 80 நாட்களில் வெளிவிடும் சக்தியை ஒரே விநாடியில் வெளியிடுவதாக கூறுகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X